சதி லீலாவதி

sathileelavathi
நடிப்பு
எம்.கே.ராதா, எம்.ஜி.ராமச்சந்திரன், டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன், எம்.எஸ்.ஞானாம்பாள்

கதை
எஸ்.எஸ்.வாசன்

இசை
சுந்தர வாத்யார்

இயக்கம்
எல்லிஸ் ஆர். டங்கன்

தயாரிப்பு
எல்லிஸ் ஆர். டங்கன்

தயாரிப்பு நிறுவனம்
மனோரமா பிலிம்ஸ்

வெளியீடு
28 மார்ச் 1936

வீடியோ


     சதிலீலாவதி 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல்லிஸ் டங்கன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம்.கே.ராதா, எம்.ஜி.ராமச்சந்திரன், டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன், எம்.எஸ்.ஞானாம்பாள் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

     காப்புரிமை பிரச்னை காரணமாக வழக்கில் சிக்கிய தமிழ் திரைப்படங்களில் இப்படமும் ஒன்றாகும். இப்படத்தின் முழுமையான எந்த ஒரு பிரதியும் தற்சமயம் இல்லையென்றாலும் கோர்ட் காட்சிகள் எம்.ஜி.ராமச்சந்திரன், கான்ஸ்டபிளாக நடித்துள்ள ஒரு சில காட்சிகள் மட்டும் யூடியூப் தளத்தில் காணக் கிடைக்கின்றன.

sathileelavathi
     பணக்காரரான ராதாகிருஷ்ணனுக்கு (எம்.கே.ராதா) லீலாவதியுடன் (எம்.எஸ்.ஞானாம்பாள்) திருமணம் நடைபெறுகிறது. ராதாகிருஷ்ணனை குடி, பெண்கள் சகவாசம் என தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறார் அவரின் நண்பர் ராமநாதன் (டி.எஸ்.பாலையா). இதனால் கணவனின் கொடுமைகளுக்கு ஆளாகிறார் லீலாவதி.

sathileelavathi
     ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தன் நண்பர் பரசுராமனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, போலீஸிடமிருந்து தப்பி ஓடுகிறார் ராமநாதன். இறுதியில் இலங்கைக்கு தப்பிச் சென்று அங்கு தேயிலைத் தோட்டத்தில் வேலைக்குச் சேர்கிறார்.

     சில வருடங்களுக்குப் பிறகு அங்கு கிடைத்த புதையலினால் மீண்டும் பணக்காரராக நாடு திரும்புகிறார் ராதாகிருஷ்ணன். ஆனால் விரைவில் அவர் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு, கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு, விசாரணை நடைபெற்று தூக்குத்தண்டனை அளிக்கப்படுகிறது.

     தூக்குதண்டனை நிறைவேற்றப்படும் போது இன்ஸ்பெக்டர் ரங்கையா நாயுடு (எம்.ஜி.ராமச்சந்திரன்) அங்கு பரசுராமனோடு வருகிறார். உண்மையில் கொலை செய்யப்பட்டது வேறொருவர். அந்தக் கொலையையும் செய்தது ராதாகிருஷ்ணன் அல்ல, அவர் நண்பர் ராமநாதன் தான் என்பது தெரிகிறது. ராதாகிருஷ்ணன் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுகிறார். ராதாகிருஷ்ணனும் லீலாவதியும் வாழ்வில் இணைகிறார்கள்.