|
|
பிரகலாதா நடிப்பு
டி.ஆர்.மகாலிங்கம், ஆர்.பாலசுப்ரமணியம், நாகர்கோவில் கே. மகாதேவன், எம்.ஜி.ராமச்சந்திரன், என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.துரைராஜ், எம்.ஆர்.சந்தானலட்சுமி, டி.ஏ.மதுரம், பி.எஸ்.ஞானம்கதை
டி.சி.வடிவேலு நாயக்கர்இசை
சர்மா சகோதரர்கள்இயக்கம்
பி.என். ராவ்தயாரிப்பு
சேலம் சங்கர்தயாரிப்பு நிறுவனம்
சேலம் சங்கர் பிலிம்ஸ்வெளியீடு
12 டிசம்பர் 1939![]() இருபது முறை பல்வேறு மொழிகளில் இப்படம் எடுக்கப்பட்டு, பெரும்பாலும் அனைத்திலும் வசூலில் முத்திரை பதித்தது. முக்கியமாக இந்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, அசாமி, ஆகிய மொழியில் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் எம்.ஜி.ராமச்சந்திரன் இந்திரன் வேடத்தில் தோன்றினார். இப்படத்தில் எம்.ஜி.ஆருக்கும், சந்தானலட்சுமிக்கும் இடையே கத்தி சண்டை காட்சி உள்ளது. விஷ்ணு புராணத்தில் ஒரு பகுதியே இப்படத்தின் கதை. தந்தை ஹிரண்யகஷ்யப்பின் விருப்பத்திற்கு மாறாக இறைவன் விஷ்ணுவின் மீது மாளாத பக்தி கொண்டிருக்கிறான் மகன் பிரகலாதன். மகனின் மனதை மாற்ற ஹிரண்யகஷ்யப் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோற்றுப் போகவே, கடைசியாக மகனை கொலை செய்ய முடிவு செய்கிறான். மகன் பிரகலாதனைக் காப்பாற்ற இறைவன் விஷ்ணு, நரசிம்ம மூர்த்தியாக தோன்றி, அரக்கன் ஹிரண்யகஷ்யப்பை கொல்கிறார். இதுதான் படத்தின் கதை. மலையாளத்தில் வெளியான இப்படத்தின் கதை, வசனங்களைத் தழுவியே தமிழில் கதை, வசனங்கள் இடம்பெற்றன. மலையாளத்தில் இப்படத்திற்கு கதை, வசனம் எழுதியவர் என்.பி.செல்லப்பன் நாயர், தமிழில் இப்படத்திற்கு கதை, வசனம் எழுதியவர் டி.சி.வடிவேலு நாயக்கர். |