தாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்)

dhaasippen
நடிப்பு
டி.ஆர்.மகாலிங்கம், எம்.ஜி.ராமச்சந்திரன், என்.எஸ்.கிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, புளிமூட்டை ராமசாமி, ஆர்.பாலசரஸ்வதி, எம்.ஆர்.சந்தானலட்சுமி, டி.ஏ.மதுரம்

கதை
பம்மல் சம்பந்த முதலியார்

படத்தொகுப்பு
ஆர்.எஸ்.மணி

இசை
லலிதா வெங்கட்ராமன், எஸ்.ராஜேஸ்வர ராவ்

இயக்கம்
எல்லிஸ் ஆர். டங்கன்

தயாரிப்பு நிறுவனம்
மினர்வா மூவிடோன், நியூடோன் ஸ்டூடியோ, புவனேஸ்வரி பிக்சர்ஸ்

வெளியீடு
3 மார்ச் 1943

     தாசிப்பெண், ஜோதிமலர் அல்லது தும்பை மகாத்மியம் என்ற மூன்று பெயர்களில் 1943 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த தமிழ்த் திரைப்படத்தை எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கியிருந்தார். இதில் டி.ஆர்.மகாலிங்கம், எம்.ஜி.ராமச்சந்திரன், என்.எஸ்.கிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, புளிமூட்டை ராமசாமி, பாலசரஸ்வதி, எம்.ஆர்.சந்தானலட்சுமி, டி.ஏ.மதுரம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

     புவனேஸ்வரிப் பிச்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு லலிதா வெங்கட்ராமன், எஸ். ராஜேஸ்வர ராவ் ஆகியோர் இசையமைத்திருந்தனர்.

     ஒரு இளம் தேவதாசி (ஆர்.பாலசரஸ்வதி) ஒரு ஜமீந்தாரின் (வி.கே.தாஸ்) ஆசைக்கு இணங்க நிர்பந்திக்கப்படுகிறாள். ஆனால் அதற்கு உடன்பட தேவதாசி மறுக்கிறாள். ஏனெனில் அவள் சிவபெருமானின் (எம்.ஜி.ஆர்) பக்தை, மேலும் அவள் மற்றொருவரை (டி.ஆர்.மகாலிங்கம்) மணக்க விருப்பமுடன் இருக்கிறாள். ஜமீந்தார் அவளை கடத்தி திருமணம் செய்ய முயற்சிக்கிறார். அவருடைய இந்த முயற்சியை சிவனும் பார்வதியும் (எம்.ஆர்.சந்தானலட்சுமி) தடுக்கிறார்கள்.

     அதே நேரத்தில் ஏற்கெனவே வேறொருவருடன் திருமணமான தேவதாசியின் சகோதரி (டி.ஏ.மதுரம்) புடவை விற்க வரும் வியாபாரி (என்.எஸ்.கிருஷ்ணன்) மீது காதல் கொள்கிறாள். இந்த கள்ளக்காதலை ஒவ்வொரு தடவையும் பயங்கர தோற்றமுடையவர் (புளிமூட்டை ராமசாமி) தடுக்கிறார்.

     தேவதாசி தன்னுடைய வாழ்வில் வெறுப்படைகிறாள். அவளின் பிரார்த்தனையை ஏற்று சிவபெருமான் அவளை தும்பைப் பூவாக மாற்றுகிறார். இன்றும் சிவபெருமானுக்கு தும்பைப் பூ அர்ச்சிக்கப்படுகிறது. அதனால் இப்படத்திற்கு தும்பை மகாத்மியம் என பெயர் வந்தது.

     இரண்டாம் உலகப் போரினால் ஏற்பட்ட பிலிம் தட்டுப்பாட்டின் காரணமாக இப்படம் 13,623 அடி நீலம் மட்டுமே உடைய குறும் படமாகத்தான் வெளியானது.