படகோட்டி

padagotti
நடிப்பு
எம்.ஜி. ராமச்சந்திரன், பி. சரோஜா தேவி, எம்.என். நம்பியார், எஸ்.ஏ. அசோகன், எஸ்.வி. ராம்தாஸ், நாகேஷ், மனோரமா, ஜெயந்தி

இசை
எம்.எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பாடல்கள்
வாலி

படத்தொகுப்பு
சி.பி. ஜம்புலிங்கம்

ஒளிப்பதிவு
பி.எல். ராய்

மூலக் கதை
நன்னு (பி.பி. சந்திரா)

வசனம்
டி.கே. கிருஷ்ணசாமி

நகைச்சுவை வசனம்
ஏ.எல். நாராயணன்

திரைக்கதை, இயக்கம்
டி. பிரகாஷ்ராவ்

தயாரிப்பு
ஜி.என். வேலுமணி

தயாரிப்பு நிறுவனம்
சரவணா பிலிம்ஸ்

வெளீயீடு:
3 நவம்பர் 1964

வீடியோ


*****
பாடல்கள்
1. தரை மேல் பிறக்க வைத்தான்

படம் : படகோட்டி (1964)
பாடியவர் : டி.எம். செளந்திரராஜன்
இசை : எம்.எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடலாசிரியர் : வாலி

வீடியோ


உலகத்தின் தூக்கம் கலையாதோ ஓ ஓ ஓ
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ ஓ ஓ ஓ
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ ஓ ஓ ஓ
ஒரு நாள் பொழுதும் புலராதோ ஓ ஓ ஓ

தரை மேல் பிறக்க வைத்தான்
எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான்
பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான்

தரை மேல் பிறக்க வைத்தான்
எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான்
பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான்

தரை மேல் பிறக்க வைத்தான் ஆ ஆ ஆ

கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
உறவைக் கொடுத்தவர் அங்கே ஏ ஏ ஏ
அலை கடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக் கொடுப்பவர் இங்கே ஏ ஏ ஏ
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இதுதான் எங்கள் வாழ்க்கை
இதுதான் எங்கள் வாழ்க்கை

தரை மேல் பிறக்க வைத்தான்
எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான்
பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான்

கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடிநீர் தருபவர் யாரோ ஓ ஓ ஓ
தனியாய் வந்தோர் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ ஓ ஓ ஓ
ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு ஜான் வயிறை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்
ஊரார் நினைப்பது சுலபம்

தரை மேல் பிறக்க வைத்தான்
எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான்
பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான்
தரை மேல் பிறக்க வைத்தான்

*****