|
|
தெய்வம் ![]() நடிப்பு
கிருபானந்த வாரியார்,ஜெமினி கணேசன், கே.ஆர்.விஜயா, ஸ்ரீகாந்த், சௌகார் ஜானகி, சிவக்குமார், மேஜர் சுந்தர்ராஜன், ஆர்.எஸ்.மனோகர், அசோகன், ஏ.வி.எம்.ராஜன், வி.கோபாலகிருஷ்ணன், முத்துராமன், நாகேஷ், வி.எஸ்.ராகவன்பாடல்கள்
கவிஞர் கண்ணதாசன்இசை
குன்னக்குடி வைத்தியநாதன்இயக்கம்
எம்.ஏ.திருமுகம்தயாரிப்பு
எம்.எம்.ஏ.சின்னப்ப தேவர்தயாரிப்பு நிறுவனம்
தண்டாயுதபாணி பிலிம்ஸ்வெளீயீடு: நவம்பர் 4, 1972 வீடியோ ***** பாடல்கள்
1. மருதமலை மாமணியே
படம் : தெய்வம் (1972) இசை : குன்னக்குடி வைத்தியநாதன் பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன் பாடியவர்கள் : மதுரை சோமசுந்தரம் வீடியோ கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை? தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை? தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை ஆஆஆஆஆ... ஆஆஆஆஆ... மருத மலை மருத மலை முருகா மருதமலை மாமணியே முருகய்யா மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா மணமிகு சந்தனம் அழகிய குங்குமம் மணமிகு சந்தனம் அழகிய குங்குமம் ஐயா உமது மங்கல மந்திரமே மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆஆஆ... தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆஆஆ... மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் ஆஆஆ... ஆ... ஆஆஆஆஆ... ஆஆஆஆஆஆ... ஆ... ஆஆஆஆஆஆ... கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் நாடியென் வினை தீர நான் வருவேன் நாடியென் வினை தீர நான் வருவேன் அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆஆஆ... அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆஆஆ... மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன் பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன் சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன் பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன் பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம் காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம் காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே பனியது மழையது நதியது கடலது சகலமும் உனதொரு கருணையில் எழுவது பனியது மழையது நதியது கடலது சகலமும் உனதொரு கருணையில் எழுவது வருவாய் குகனே வேலய்யா ஆஆஆ... ஆ... ஆஆஆஆஆ... ஆஆஆஆஆஆ... தேவர் வணங்கும் மருதமலை முருகா மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா *****
2. குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
படம் : தெய்வம் (1972) இசை : குன்னக்குடி வைத்தியநாதன் பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன் பாடியவர் : பெங்களூர் ரமணியம்மாள் வீடியோ அங்கே குவிந்ததமா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் அங்கே குவிந்ததமா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம் தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம் தெருமுழுதும் பக்தர்களில் ஆனந்தமன்றம் தெருமுழுதும் பக்தர்களில் ஆனந்தமன்றம் தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெருமானை தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெருமானை முருகப் பெருமானை குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் அங்கே குவிந்ததமா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை வேல் முருகா வெற்றி வேல் முருகா வேல் முருகா வெற்றி வேல் முருகா சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள் சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள் அரஹர பாடுங்கள் வருவதைப் பாருங்கள் அரஹர பாடுங்கள் வருவதைப் பாருங்கள் கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல் கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல் கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல் கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல் வேல் முருகா அரோகர வெற்றி வேல் முருகா வேல் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகா வேல் முருகா அரோகரா வெற்றி வேல் முருகா வேல் முருகா வெற்றி வேல் முருகா வேல் முருகா வெற்றி வேல் முருகா *****
3. திருச்செந்தூரில் போர் புரிந்து
படம் : தெய்வம் (1972) இசை : குன்னக்குடி வைத்தியநாதன் பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன் பாடியவர் : ராதா ஜெயலட்சுமி வீடியோ சினமெல்லாம் தீர்ந்த கந்தன் திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் ஆஆஆ பெண் : திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன் திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் பெண் : வரிசை வரிசை என அழகுக் காவடிகள் தணிகை வேலன் அவன் சன்னிதி தேடி ஆஆஆ ஆஆஆ ஆஆஆ குழு : வரிசை வரிசை என அழகுக் காவடிகள் தணிகை வேலன் அவன் சன்னிதி தேடி வருகின்ற காட்சி பாருங்கள் இந்த ஆனந்தமெல்லாம் எதிலுண்டு சாட்சி கூறுங்கள் ஆஆஆ பெண் : திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன் திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் பெண் : கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடி கொண்டு ஆணும் பெண்ணும் பாடிக் கொண்டு தேடி வருவார் பெண் : கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடி கொண்டு ஆணும் பெண்ணும் பாடிக் கொண்டு தேடி வருவார் இங்கே ஆணும் பெண்ணும் பாடிக் கொண்டு தேடி வருவார் தேடி வருவார் பெண் : காவடிகள் பால் காவடிகள் பழக் காவடிகள் புஷ்பக் காவடிகள் மச்சக் காவடிகள் பன்னீர்க் காவடிகள் சேவற் காவடிகள் சர்ப்பக் காவடிகள் தீர்த்தக் காவடிகள் பெண் : பால் காவடி பழக் காவடி புஷ்பக் காவடி மச்சக் காவடி பன்னீர்க் காவடி சேவற் காவடி சர்ப்பக் காவடி தீர்த்தக் காவடிகள் ஆண் : கந்தவேல் முருகனுக்கு குழு : அரோகரா ஆண் : கதிர்வேல் முருகனுக்கு குழு : அரோகரா ஆண் : வேல் வேல் குழு : வெற்றி வேல் ஆண் : வேல் வேல் குழு : வெற்றி வேல் பெண் : வேலிருக்க வினையுமில்லை மயிலிருக்க பயமுமில்லை ஆண் : திருத்தணி முருகனுக்கு குழு : அரோகரா பெண் : வேலிருக்க வினையுமில்லை மயிலிருக்க பயமுமில்லை அடைவோம் கந்தன் சேவடி என ஆசை கொண்டு எடுத்தோம் இந்தக் காவடி அடைவோம் கந்தன் சேவடி என ஆசை கொண்டு எடுத்தோம் இந்தக் காவடி பெண் : கந்தனிடம் உந்தனையே சொந்தம் என விட்டுவிடு சந்ததமும் செல்வமெல்லாம் வீடு வருமே உன் சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே முருகனருள் கூட வருமே பெண் : கந்தனிடம் உந்தனையே சொந்தம் என விட்டுவிடு கந்தனிடம் உந்தனையே சொந்தம் என விட்டுவிடு பெண் : சந்ததமும் செல்வமெல்லாம் வீடு வருமே உன் சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே சந்ததமும் செல்வமெல்லாம் வீடு வருமே உன் சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே முருகனருள் கூட வருமே கந்தனருள் கூட வருமே குமரன் அருள் கூட வருமே *****
4. திருச்செந்தூரின் கடலோரத்தில்
படம் : தெய்வம் (1972) இசை : குன்னக்குடி வைத்தியநாதன் பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன் பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் & சீர்காழி கோவிந்தராஜன் வீடியோ செந்தில் நாதன் அரசாங்கம் திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம் ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசி திங்களிலும் அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம் அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம் ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசி திங்களிலும் அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம் திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் தேடி தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் மங்கையரின் குங்குமத்தை காக்கும் முகம் ஒன்று வாடுகின்ற ஏழைகளை காணும் முகம் ஒன்று சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும் முகம் ஒன்று ஜாதி மத பேதமின்றி பார்க்கும் முகம் ஒன்று நோய் நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ண முகம் ஒன்று நூறு முகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு மங்கையரின் குங்குமத்தை காக்கும் முகம் ஒன்று வாடுகின்ற ஏழைகளை காணும் முகம் ஒன்று சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும் முகம் ஒன்று ஜாதி மத பேதமின்றி பார்க்கும் முகம் ஒன்று நோய் நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ண முகம் ஒன்று நூறு முகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு ஆறுமுகம் இங்கு திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் தேடி தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் பொன்னழகு மின்னி வரும் வண்ண மயில் கந்தா கண்மலரில் தன்னருளை காட்டி வரும் கந்தா பொன்னழகு மின்னி வரும் வண்ண மயில் கந்தா கண்மலரில் தன்னருளை காட்டிவரும் கந்தா நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால் கந்தா முருகா நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால் கந்தா முருகா வருவாய் அருள் தருவாய் முருகா *****
|