|
|
கிழக்கே போகும் ரயில் ![]() நடிப்பு
சுதாகர், எம்.ஆர். ராதிகா, விஜயன், காந்திமதி, ஜனகராஜ், கவுண்டமணிஇசை
இளையராஜாஒளிப்பதிவு
பி.எஸ். நிவாஸ்பாடல்கள்
கண்ணதாசன், முத்துலிங்கம், கங்கை அமரன், சிற்பி பாலசுப்ரமணியம்படத்தொகுப்பு
டி. திருநாவுக்கரசுஇயக்கம்
பாரதிராஜாதயாரிப்பு
எஸ்.ஏ. ராஜ்கண்ணுதயாரிப்பு நிறுவனம்
ஸ்ரீ அம்மன் கிரியேசன்ஸ்வெளீயீடு: 10 ஆகஸ்ட் 1978இப்படம் தூர்ப்பு வெள்ளே ரைலு என்ற பெயரில் 1979 இல் தெலுங்கில் மறுஆக்கம் செய்யப்பட்டது. கிராமியச் சூழலில் பெருமளவில் வெளிப்புறப் படப்பிடிப்பாகவே தயாரிக்கப்பட்டது இப்படம். இப்படத்தில்தான் ராதிகா அறிமுகமானார். பாக்கியராஜ் உதவி இயக்குநராக பணியாற்றினார். நாவிதன் ஒருவரின் மகனான ஒரு ஏழைக் கிராமக் கவிஞன் மற்றும் அந்தக் கிராமத்திலேயே அடைக்கலம் புகும் கள்ளமற்ற பெண் ஒருத்தி ஆகியோரின் இடையிலான காதலை சுவைபடவும் இயற்கையாகவும் சித்தரித்தது இப்படம். இளையராஜா இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகவும் பிரபலமாயின. கர்நாடக இசையில் அமைந்த ‘மாஞ்சோலைக் கிளிதானோ’பாடல் பின்னணிப் பாடகர் ஜெயசந்திரனுக்குப் பெரும் புகழை பெற்றுத் தந்தது. இப்படாலை கவிஞர் முத்துலிங்கம் இயற்றியிருந்தார். 1978-ல் தமிழக அரசின் தங்கப்பதக்கம் பெற்ற பாடல் இது. கண்ணதாசன் இயற்றிய ‘கோயில் மணியோசை’ பாடலை மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி பாடியிருந்தனர். கங்கை அமரன் இயற்றிய ‘பூவரசம்பூ பூத்தாச்சு’ பாடலை எஸ். ஜானகி பாடியிருந்தார். சிற்பி பாலசுப்ரமணியம் இயற்றிய ‘மலர்களே’ பாடலை மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி பாடியிருந்தனர். வீடியோ *****
பாடல்கள்
1. மாஞ்சோலை கிளிதானோ படம் : கிழக்கே போகும் ரயில் (1978) பாடியவர் : பி. ஜெயச்சந்திரன் இசை : இளையராஜா பாடலாசிரியர் : கவிஞர் முத்துலிங்கம் வீடியோ மான்தானோ வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ இவள் ஆவாரம்பூ தானோ நடை தேர்தானோ சலங்கைகள் தரும் இசை தேன்தானோ ஓஓஓ மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ இவள் ஆவாரம்பூ தானோ நடை தேர்தானோ சலங்கைகள் தரும் இசை தேன்தானோ ஓஓஓ நீரோடை போலவே சிரித்தாடி ஓடினாள் நீரோடை போலவே சிரித்தாடி ஓடினாள் வளையோசையே காதிலே சிந்து பாடுதே பளிங்குச்சிலையே பவழக்கொடியே குலுங்கிவரும் இடையில் புரளும் சடையில் மயக்கும் மலர்க்கொடி மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ இவள் ஆவாரம்பூ தானோ நடை தேர்தானோ சலங்கைகள் தரும் இசை தேன்தானோ ஓஓஓ மின்னல் ஒளியென கண்ணைப் பறித்திடும் அழகோ தேவதையோ மின்னல் ஒளியென கண்ணைப் பறித்திடும் அழகோ தேவதையோ அங்கம் ஒரு தங்கக்குடம் அழகினில் மங்கை ஒரு கங்கை நதி உலகினில் துள்ளும் இதழ் தேன்தான் அள்ளும் கரம் நான்தான் மஞ்சம் அதில் வஞ்சிக்கொடி வருவாள் சுகமே வருவாள் சுகமே தருவாள் மகிழ்வேன் கண் காவியம் பண் பாடிடும் பெண்ணோவியம் செந்தாமரையே மேலாடை மாங்கனி அசைந்தாடும் வேளையில் பலகோடிகள் ஆசையே வந்து மோதுதே கரும்பு வயலே குறும்பு மொழியே இளமையெனும் தனிமை நெருப்பை அணைக்கும் பருவ மழைமுகில் மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ இவள் ஆவாரம்பூ தானோ நடை தேர்தானோ சலங்கைகள் தரும் இசை தேன்தானோ ஓஓஓ மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ *****
2. கோவில் மணி ஓசை படம் : கிழக்கே போகும் ரயில் (1978) பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி இசை : இளையராஜா பாடலாசிரியர் : கண்ணதாசன் வீடியோ கேட்டதாரோ இங்கு வந்ததாரோ பாஞ்சாலி பாஞ்சாலி கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ அவர் என்ன பேரோ பரஞ்சோதி பரஞ்சோதி கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ இங்கு வந்ததாரோ கன்னிப் பூவோ பிஞ்சுப் பூவோ ஏழைக் குயில் கீதம் தரும் நாதம் அது காற்றானதோ தூதானதோ கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ அவர் என்ன பேரோ பாட்டுப் பாடும் கூட்டத்தாரோ ஏழைக் குயில் கீதம் தரும் நாதம் அது கொண்டாந்ததோ என்னை இங்கு கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ பாடல் ஒரு கோடி செய்தேன் கேட்டவர்க்கு ஞானம் இல்லை ஆசைக் கிளியே வந்தாயே பண்ணோடு நான் பிறந்த நாளில் இது நல்ல நாளே சின்னச் சின்ன முல்லை கிளிப் பிள்ளை என்னை வென்றாளம்மா கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ ஊருக்கு போன பொண்ணு உள்ளூரு செல்லக் கண்ணு கோவில் மணி ஓசை கேட்டாளே வந்தாளே பாவம் உந்தன் கச்சேரிக்கு பொண்ணு நானா பாடும் வரை பாடு தாளம் போடு அதை நீயே கேளு கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ என் மனது தாமரைப் பூ உன் மனது முல்லை மொட்டு காலம் வருமே நீ கூட பெண்ணாக ஊரில் ஒரு பெண்ணா இல்லை தேடிப் பாரு நல்ல பெண்ணை கண்டால் கொஞ்சம் சொல்லு அது நீ தானம்மா கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ இங்கு வந்ததாரோ பாட்டுப் பாடும் கூட்டத்தாரோ ஏழைக் குயில் கீதம் தரும் நாதம் அது கொண்டாந்ததோ என்னை இங்கு கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ *****
|