|
|
முள்ளும் மலரும் ![]() நடிப்பு
ரஜினிகாந்த், சரத் பாபு, படாபட் ஜெயலட்சுமி, ஷோபா, வெண்ணிற ஆடை மூர்த்திஇசை
இளையராஜாஒளிப்பதிவு
பாலு மகேந்திராபாடல்கள்
கண்ணதாசன், பஞ்சு அருணாச்சலம், கங்கை அமரன்படத்தொகுப்பு
டி. வாசுகதை
உமா சந்திரன்திரைக்கதை, இயக்கம்
ஜோ. மகேந்திரன்தயாரிப்பு
வேணு செட்டியார், வி. மோகன்தயாரிப்பு நிறுவனம்
ஆனந்தி பிலிம்ஸ்வெளீயீடு: 15 ஆகஸ்டு 1978முள்ளும் மலரும் திரைப்படம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்தது. மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், சரத்பாபு, படாபட் ஜெயலட்சுமி, ஷோபா, வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். கண்ணதாசன், பஞ்சு அருணாச்சலம், கங்கை அமரன் ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர். பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படம் தமிழில் பாலுமகேந்திராவின் முதல் படமாகும். இயக்குநர் மகேந்திரனுக்கு பாலு மகேந்திராவை நடிகர் கமல்ஹாசன் அறிமுக செய்து வைத்தார். மேலும் கமல்ஹாசன் இப்படத்தில் புரொடக்ஷன் மேனேஜராகவும் பணியாற்றினார். இப்படத்தினை ஆனந்தி பிலிம்ஸ் சார்பில் வேணு செட்டியார் மற்றும் வி. மோகன் தயாரித்திருந்தனர். 1977ல் ஆடு புலி ஆட்டம் திரைப்பட வெளியீட்டிற்குப் பின் மகேந்திரன் நடிகர் ரஜினிகாந்திடம் அடுத்து தான் இயக்கும் படத்தில் அவரையே கதாநாயகனாக நடிக்க வைப்பதாக தெரிவித்திருந்தார். அதே போல் முள்ளும் மலரும் படத்தில் அவரையே தேர்வு செய்தார். படத் தயாரிப்பாளரான வேணு செட்டியார் இதனை விரும்பாவிடினும் மகேந்திரன் உறுதியாயிருக்கவே வேறு வழியின்றி இதற்கு ஒத்துக் கொண்டார். ஆனால் நடிகர் ரஜினிகாந்த் தன் சிறந்த நடிப்பின் மூலம் படத்திற்கு பெருமை சேர்த்ததோடு, தன்னை முன்னிறுத்திய இயக்குநர் மகேந்திரனின் நம்பிக்கையை மெய்ப்படுத்தினார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிருங்கேரியிலும், சில காட்சிகள் ஊட்டியிலும் படமாக்கப்பட்டன. மொத்தம் 30 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. பாண்டிச்சேரி அருகே மகேந்திரன் தான் பார்த்த உறியடி காட்சியினால் கவரப்பட்டு, கதையில் இல்லாவிட்டாலும், திரைக்கதையில் இரு உறியடி காட்சிகளை வைத்திருந்தார். அதே போல் சிருங்கேரி கடல் சூழ்நிலைகளால் கவரப்பட்டு மகேந்திரன், மங்கா கதாபாத்திரம் மீன் மீது பிரியம் கொண்டதாக மாற்றினார். சிறந்த திரை வசனகர்த்தா என்பதற்காகவே மகேந்திரனை இயக்குநராக தேர்வு செய்தார் வேணு செட்டியார், ஆனால் முள்ளும் மலரும் திரைப்படத்திலோ வசனங்கள் மிகவும் குறைந்த அளவிலேயே உபயோகப்படுத்தப்பட்டிருந்தன. காட்சி வழியாகவே கதை சொல்லி அசத்தியிருந்தார் இயக்குநர் மகேந்திரன். *****
பாடல்கள்
1. செந்தாழம் பூவில்
படம் : முள்ளும் மலரும் (1978) பாடியவர்கள் : கே.ஜே. யேசுதாஸ் இசை : இளையராஜா பாடலாசிரியர் : கண்ணதாசன் வீடியோ ம்ம்ம்ம்ம்... ம்ஹும்... ம்ஹும்... ம்ஹும்... செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா பூவாசம் மேடை போடுதம்மா பெண் போல ஜாடை பேசுதம்மா அம்மம்மா ஆனந்தம் அம்மம்மா ஆனந்தம்ம்ம்ம்... வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோக கூந்தலோ மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளைத் தேடுது ஆசைக் குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது காடுகள் மலைகள் தேவன் கலைகள் செந்தாழம் பூவில் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப் போகிறாள் ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள் பள்ளம் சிலர் குள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன் பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன் மலையின் காட்சி இறைவன் ஆட்சி செந்தாழம் பூவில் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை ஓடை தரும் வாடைக் காற்று வானுலகைக் காட்டுது உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக் கூட்டுது மறவேன் மறவேன் அற்புதக் காட்சி செந்தாழம் பூவில் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா பூவாசம் மேடை போடுதம்மா பெண் போல ஜாடை பேசுதம்மா அம்மம்மா ஆனந்தம் அம்மம்மா ஆனந்தம் *****
2. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
படம் : முள்ளும் மலரும் (1978) பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், எல்.ஆர். அஞ்சலி மற்றும் குழுவினர் இசை : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் வீடியோ லே லே லே லே லே லே லே லே அம்மனைக் கும்பிட்டா நமக்கெல்லாம் நல்லதே நடக்குமே கெட்டதை அம்மனும் கொடுக்காதே லே லே லே லே லே லே லே லே ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே ஹோய் நான் தாண்டா என் மனசுக்கு ராஜா வாங்குங்கடா வெள்ளியில் கூஜா நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன் கேட்குற வரத்தை கேட்டுக்கடா ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே ஹோய் யானைய கொண்டாங்க குதிரைய கொண்டாங்க நானும் ஊர்கோலம் போக யானைய கொண்டாங்க குதிரைய கொண்டாங்க நானும் ஊர்கோலம் போக வாழை தென்னை மாவிலை எல்லாம் தொங்கணும் தோரணமாக ஏண்டா டேய் ராணிய கூப்பிடு அவளோட சேடிய கூப்பிடு ஹேய் மதுரை ராஜியம் என்னது ஒனக்கொரு பாதியை கொடுக்கிறேண்டா ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே ஹே ஹே ஹேய் ஏலே லே லேலேலேலே லேலேலேலே லேலேலேலேலே தந்தனா பூசுங்க சாமியே லேலே பாருங்க என்ன வேணும் அத கேளுங்க ஏலே லே லேலேலேலே லேலேலேலே லேலேலேலேலே பொண்ணா பூ பூத்து வைரம் காயாக காய்க்கும் என்னோட தோட்டம் பொண்ணா பூ பூத்து வைரம் காயாக காய்க்கும் என்னோட தோட்டம் மாசம் மூணு போகம் விளையும் லாபம் மேலும் கூடும் கையிருக்கு உழைச்சி காட்டுறேன் மனசிருக்கு பொழச்சி பாக்குறேன் ஹே போனா போகுது வேலை உனக்கொரு வேலைய கொடுக்குறேண்டா ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே ஹே ஹே ஹே ஏலே லே லேலேலேலே லேலேலேலே லேலேலேலேலே சொல்லாமே சொல்லு மல்லாப்பு மாலையில் சாமிக்கு போட்டுட்டு சொல்லி சொல்லி பாருங்க லேலே லேல லேலலலா லேலேலேலே ஊரும் கொண்டாட உலகம் கொண்டாடா ஊர்கோலம் போகும் சாமி ஊரும் கொண்டாட உலகம் கொண்டாடா ஊர்கோலம் போகும் சாமி நாடும் வீடும் நல்லா வாழ நீ தான் நேர் வழி காமி சாதி சனம் ஒன்னாக சேர்ந்தது சாமிய தான் எல்லாரும் கேட்குது நீ கேட்டா கேட்டதை கொடுக்கற சாமிய பாத்து கேளுங்கடா ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே ஹோய் நான் தாண்டா என் மனசுக்கு ராஜா வாங்குங்கடா வெள்ளியில் கூஜா நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன் கேட்குற வரத்தை கேட்டுக்கடா ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே ஹோய் |