தர்ம யுத்தம்

dharma yuddham
நடிப்பு
ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, தேங்காய் சீனிவாசன், மேஜர் சுந்தரராஜன், சுருளி ராஜன், எஸ்.ஏ. அசோகன், வி. கோபாலகிருஷ்ணன், ஒய்.ஜி. மகேந்திரன், சச்சு

பாடல்கள்
கண்ணதாசன், எம்.ஜி. வல்லபன், ஹரி

இசை
இளையராஜா

கதை
பீட்டர் செல்வகுமார்

படத்தொகுப்பு
ஜி. ராதாகிருஷ்ணன்

ஒளிப்பதிவு
என். பாலகிருஷ்ணன்

இயக்கம்
ஆர்.சி. சக்தி

தயாரிப்பு
டி.ஆர். ஸ்ரீநிவாசன்

தயாரிப்பு நிறுவனம்
சாருசித்ரா பிலிம்ஸ்

வெளீயீடு: 29 ஜூன் 1979


வீடியோ


*****

பாடல்கள்
1. ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி
படம் : தர்ம யுத்தம் (1979)
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி
இசை : இளையராஜா
இயற்றியவர் : எம்.ஜி. வல்லபன்

வீடியோ


தா ததத்ததா ததத்ததா ததத்ததா
தா தா தாதத் தா தாதத் தா தாதத் தா
தா தாதத் தா தாதத் தா தாதத் ஆஆஆ
தாதத் தாதத் தாதத் தாதத் தாதத் தாதத் தா

ஆகாய கங்கை
பூந்தேன் மலர் சூடி
பொன்மான் விழித் தேடி
மேடை கட்டி
மேளம் தட்டி
பாடுதே மங்களம்
நாடுதே சங்கமம்

குங்குமத் தேரில்
நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
தாளம் தொட்டு
ராகம் தொட்டு
பாடுவான் மங்களம்
நாடுவான் சங்கமம்

காதல் நெஞ்சில்... ஹே ஹே ஹே ஹே...
மேள தாளம்...
ஓ ஓ ஓ ஓ...

காதல் நெஞ்சில்...
ஹே ஹே ஹே ஹே...
மேள தாளம்...
ஹ ஹ ஹ ஹ...

காலையில் வேளையில்
பாடும் பூபாளம்
மன்னா இனி...
உன் தோளிலே...
படரும் கொடி நானே
பருவப் பூ தானே

பூ மஞ்சம் உன் மேனி
எந்நாளில் அரங்கேறுமோ

குங்குமத் தேரில்
நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்

மேடை கட்டி
மேளம் தட்டி

பாடுவான் மங்களம்
நாடுவான் சங்கமம்

தேவை யாவும்

ஹே ஹே ஹே ஹே

தெரிந்த பின்னும்

ஹோ ஹோ ஹோ ஹோ

தேவை யாவும்

ஹே ஹே ஹே ஹே

தெரிந்த பின்னும்

ஹோ ஹோ ஹோ ஹோ

பூவை நெஞ்சில்
நாணம் போராடும்

ஊர் கூடியே
உறவானதும்
தருவேன் பலநூறு
பருகக் கனிச்சாறு

தளிராடும் என் மேனி
தாங்காது உன் மோகம்

ஆகாய கங்கை
பூந்தேன் மலர் சூடி
பொன்மான் விழித் தேடி

தாளம் தொட்டு
ராகம் தொட்டு
பாடுவான் மங்களம்
நாடுவான் சங்கமம்

லாலலா லாலலா
லாலலா லாலலா