புதிய வார்ப்புகள்

puthiya vaarpugal
நடிப்பு
கே. பாக்யராஜ், ரதி, உஷா ராணி, ஜி. சீனிவாசன், கவுண்டமணி, ஜனகராஜ், மனோபாலா, சந்திரசேகர்

பாடல்கள்
கண்ணதாசன், கங்கை அமரன், முத்துலிங்கம்

இசை
இளையராஜா

ஒளிப்பதிவு
பி.எஸ். நிவாஸ்

படத்தொகுப்பு
ஆர். பாஸ்கரன்

கதை
ஆர். செல்வராஜ்

வசனம்
கே. பாக்யராஜ்

திரைக்கதை, இயக்கம்
பாரதிராஜா

தயாரிப்பு
பாரதிராஜா

தயாரிப்பு நிறுவனம்
மனோஜ் கிரியேஷன்ஸ்

வெளீயீடு:
14 ஏப்ரல் 1979

வீடியோ


*****
பாடல்கள்
1. வான் மேகங்களே
படம் : புதிய வார்ப்புகள் (1979)
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி
இசை : இளையராஜா
இயற்றியவர் : கண்ணதாசன்

வீடியோ


வான் மேகங்களே
வாழ்த்துங்கள் பாடுங்கள்
நான் இன்று கண்டு கொண்டேன்
ராமன
வான் மேகங்களே

வான் மேகங்களே
வாழ்த்துங்கள் பாடுங்கள்
நான் இன்றுக் கண்டு கொண்டேன்
சீதையை
வான் மேகங்களே

பாலிலே பழம் விழுந்து
தேனிலே நனைந்ததம்மா

பாலிலே பழம் விழுந்து
தேனிலே நனைந்ததம்மா

பூவிலே மாலைக் கட்டி
சூடுவேன் கண்ணா

கூ குக்குகூ
குயில் பாடி வாழ்த்தும்
நேரம் கண்டேன்

வான் மேகங்களே
வாழ்த்துங்கள் பாடுங்கள்

தென்றலே ஆசைக் கொண்டு
தோகையை கலைந்ததம்மா

தென்றலே ஆசைக் கொண்டு
தோகையை கலைந்ததம்மா

தேவதை வண்ணம் கொண்ட
பூவை நீ கண்ணே

மா அம்மம்மா
நெஞ்சில் தீபம் ஏற்றும்
தேகம் கண்டேன்

வான் மேகங்களே
வாழ்த்துங்கள் பாடுங்கள்

பள்ளியில் பாடம் சொல்லி
கேட்க நான் ஆசைக் கொண்டேன்

பாவையின் கோவில் மணி
ஓசை நீ கண்ணே

தா தந்தன்னா
சங்கின் ஓசை கேட்கும்
நேரம் என்றோ?

வான் மேகங்களே
வாழ்த்துங்கள் பாடுங்கள்

நான் இன்றுக் கண்டு கொண்டேன்

ராமனை
வான் மேகங்களே

*****
2. இதயம் போகுதே
படம் : புதிய வார்ப்புகள் (1979)
பாடியவர் : ஜென்சி
இசை : இளையராஜா
இயற்றியவர் : முத்துலிங்கம்

வீடியோ


இதயம் போகுதே

இதயம் போகுதே
எனையே பிரிந்தே

காதல் இளங்காற்று
பாடுகின்ற பாட்டு

காதல் இளங்காற்று
பாடுகின்ற பாட்டு
கேட்காதோ

இதயம் போகுதே

மணியோசை கேட்டு
மகிழ்வோடு நேற்று
கைகள் தட்டிய
காலை சென்றதெங்கே
அரும்பான
என் காதல்
மலராகுமோ
மலராகி வாழ்வில்
மனம் வீசுமோ

இதயம் போகுதே
எனையே பிரிந்தே

லாலலலல லாலா லா
லாலலலல லாலா லா
லாலல லாலா
லலலால லாலா
லலலால லாலா
லலலால லாலா

சுடுநீரில் விழுந்து
துடிக்கின்ற மீன் போல்
தோகை நெஞ்சினில்
சோகம் பொங்குதம்மா
குயில் கூவ
வசந்தங்கள் உருவாகுமோ
வெயில் தீண்டும் பூவில்
பனி நீங்குமோ

இதயம் போகுதே
எனையே பிரிந்தே

தானானானா நா னானா
நா நா நன்னேனா
தன்னன்னா...
நானேன்னா...
தந்தனனா...
டுர்ர்ர்ரா...

மலைசாரல் ஓரம்
மயிலாடும் நேரம்
காதல் சொல்லவும்
தேவன் இல்லையம்மா
நிழல் போல உன்னோடு
நான் சங்கமம்
தரவேண்டும் வாழ்வில்
நீ குங்குமம்

இதயம் போகுதே
எனையே பிரிந்தே
காதல் இளங்காற்று
பாடுகின்ற பாட்டு
காதல் இளங்காற்று
பாடுகின்ற பாட்டு
கேட்காதோ
இதயம் போகுதே

*****
3. தம்தன நம்தன தாளம் வரும்...
படம் : புதிய வார்ப்புகள் (1979)
பாடியவர்கள் : ஜென்சி, சுலோசனா
இசை : இளையராஜா
இயற்றியவர் : கங்கை அமரன்

வீடியோ


தம்தன நம்தன... நம்தன நம்தன... நம்தன நம்தன...
நம்தன நம்தன... நம்தன நம்தன... நம்தன நம்தன...

ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ...
ஆஆஆஆ ஆஆஆஆ... ஆஆஆஆ ஆஆஆஆ...
ஆஆஆஆ ஆஆஆஆ... ஆஆஆஆ ஆஆஆஆ...
ஆஆஆஆ ஆஆஆஆ... ஆஆஆஆ ஆஆஆஆ...

தம்தன நம்தன...
நம்தன நம்தன... நம்தன...
நம்தன... நம்தன நம்தன...

தம்தன நம்தன தாளம் வரும்...
புது ராகம் வரும்...
பல பாவம் வரும்
அதில் சந்தன மல்லிகை
வாசம் வரும்

தம்தன நம்தன தாளம் வரும்...
புது ராகம் வரும்...
பல பாவம் வரும்
அதில் சந்தன மல்லிகை
வாசம் வரும்

மண மாலை வரும்...
சுப வேளை வரும்...
மண நாள்... திருநாள்...
புது நாள்... உனை அழைத்தது

தம்தன நம்தன தாளம் வரும்...
புது ராகம் வரும்...
பல பாவம் வரும்
அதில் சந்தன மல்லிகை
வாசம் வரும்

தனனா... தனனனேனனேனனேனனே...
தனனா... தனனனேனனேனனேனனே...
தனனா... தனனனேனனேனனேனனே...
தனனா... தனனா... தனனா... தனனா...
சில்லென மெல்லிய தென்றலும்
வந்திசை சொல்லியது
சுவை அள்ளியது...
மனம் நில்லென சொல்லியும் துள்ளியது

ஆஆஆஆ ஆஆஆஆ...
ஆஆஆஆ ஆஆஆஆ...

சில்லென மெல்லிய தென்றலும்
வந்திசை சொல்லியது
சுவை அள்ளியது...
மனம் நில்லென சொல்லியும் துள்ளியது

பெண் மனம் பூவினும் மெல்லியது
தவிக்கும் நினைவோ
எனைக் கிள்ளியது
மல்லிகை முல்லையில் பஞ்சணையோ
மன்னவன் கொண்டது நெஞ்சணையோ
மின்னிய மின்னலும்
கன்னியின் எண்ணங்களோ
இனிக் கனவுகள் தொடர்ந்திட

தம்தன நம்தன தாளம் வரும்...
புது ராகம் வரும்...
பல பாவம் வரும்
அதில் சந்தன மல்லிகை
வாசம் வரும்

ஆ.. ஆஆஆ ஆ ஆஆஆஆஆ...
ஆஆஆ ஆ ஆஆஆஆஆ...
ஆஆஆ ஆஆஆ... ஆஆஆ ஆஆஆ...
ஆஆஆ ஆஆஆ... ஆ...
ஆ...

சிந்தனை அம்புகள் எய்தது
என்னிடம் வந்து விழ...
பல சிந்தை எழ
மனம் மன்னவன் உன்னடி
வந்து தொழ

ஆஆஆஆ ஆஆஆஆ...
ஆஆஆஆ ஆஆஆஆ...

சிந்தனை அம்புகள் எய்தது
என்னிடம் வந்து விழ...
பல சிந்தை எழ
மனம் மன்னவன் உன்னடி
வந்து தொழ

சிந்திய பூ மலர் சிந்திவிழ...
அலைபோல் உணர்வோ
தினம் முந்தியெழ
அந்தியில் வந்த்தது சந்திரனோ...
சந்திரன் போலொரு இந்திரனோ

முந்திய நாளினில்
எந்தனின் முன்பலனோ
துணை சுகம் தர... சுவை பெற

தம்தன நம்தன தாளம் வரும்...
புது ராகம் வரும்...
பல பாவம் வரும்
அதில் சந்தன மல்லிகை
வாசம் வரும்

மண மாலை வரும்..
சுப வேளை வரும்...
மண நாள்... திருநாள்...
புது நாள்... உனை அழைத்தது

தம்தன நம்தன தாளம் வரும்..
புது ராகம் வரும்...
பல பாவம் வரும்
அதில் சந்தன மல்லிகை
வாசம் வரும்

தம்தன நம்தன...
நம்தன நம்தன...
நம்தன நம்தன...
நம்தன நம்தன...

*****