முந்தானை முடிச்சு

mundhanai mudichu
நடிப்பு
பாக்யராஜ், ஊர்வசி, பூர்ணிமா ஜெயராம், தீபா, கே.கே. சௌந்தர், நளினிகாந்த், பீலி சிவம், கோவை சரளா, பயில்வான் ரங்கநாதன்

பாடல்கள்
கங்கை அமரன், முத்துலிங்கம், புலமைப்பித்தன், நா. காமராசன்

இசை
இளையராஜா

ஒளிப்பதிவு
அசோக் குமார்

படத்தொகுப்பு
ஏ. செல்வநாதன்

கதை, திரைக்கதை, இயக்கம்
கே. பாக்யராஜ்

தயாரிப்பு
எம். குமரன், எம். சரவணன், எம். பாலசுப்ரமணியன்

தயாரிப்பு நிறுவனம்
ஏவிஎம் புரொடக்சன்ஸ்

வெளீயீடு:
22 ஜூலை 1983

*****
பாடல்கள்
1. அந்தி வரும் நேரம்
படம் : முந்தானை முடிச்சு (1983)
பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
இசை : இளையராஜா
இயற்றியவர் : கங்கை அமரன்

வீடியோ


குழு: ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ

பெண் : அந்தி வரும் நேரம்
வந்ததொரு ராகம்
அந்தி வரும் நேரம்
வந்ததொரு ராகம்
ஏதேதோ மோகம்
இனி தீராதோ தாகம்
ஏதேதோ மோகம்
இனி தீராதோ தாகம்
அந்தி வரும் நேரம்

பெண் : மந்திரங்கள் ஒலித்தது
மங்கை உடல் சிலிர்த்தது
சங்கமத்தின் சுகம் நினைத்து

குழு : ஆஆ.ஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ

ஆண் : சிந்து கவி பிறந்தது
சிந்தனைகள் பறந்தது
சந்தனத்து உடல் அணைத்து

பெண் : இதழில் ஒரு ஒலை
எழுதும் இந்த வேளை

ஆண் : இளமை என்னும் சோலை
முழுதும் இன்ப லீலை ஹான்

பெண் : நீராடுது மாந்தளிர் தேகம்
போராடுது காதலின் வேகம்
என்றென்றும் ஆனந்த யோகம்

ஆண் : அந்தி வரும் நேரம்
வந்ததொரு ராகம்
ஏதேதோ மோகம்
இனி தீராதோ தாகம்

குழு : லல்லல்லா லா லாலா லா
லல்லல்லா லா லாலா லா

ஆண் : இன்பத்துக்கு முகவுரை
என்றுமில்லை முடிவுரை
நீயிருக்க ஏது குறை

குழு : ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ

பெண் : பாதம் முதல் தலை வரை
பார்த்து நின்ற தலைவனை
பாட வந்தேன் நூறு முறை

ஆண் : அணைத்தால் தேவ லோகம்
அருகே வந்து சேரும்

பெண் : நினைத்தால் இங்கு யாவும்
இனிமை என்று கூறும்

ஆண் : ஆஹா இது மார்கழி மாதம்
அம்மாடியோ முன்பனி வீசும்
சூடேற்றும் பூ முல்லை வாசம்

பெண் : அந்தி வரும் நேரம்
வந்ததொரு ராகம்

ஆண் : ஏதேதோ மோகம்
இனி தீராதோ தாகம்

இருவர் : ஏதேதோ மோகம்
இனி தீராதோ தாகம்

குழு : ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ

*****
2. விளக்கு வச்ச நேரத்துல
படம் : முந்தானை முடிச்சு (1983)
பாடியவர்கள் : இளையராஜா, எஸ்.ஜானகி
இசை : இளையராஜா
இயற்றியவர் : நா. காமராசன்

வீடியோ


பெண் : விளக்கு வச்ச நேரத்துல
மாமன் வந்தான்
விளக்கு வச்ச நேரத்துல
மாமன் வந்தான்
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே
தாகம் என்றான்

பெண் : நான் கொடுக்க
அவன் குடிக்க
அந்த நேரம்
தேகம் சூடு ஏற

ஆண் : விளக்கு வச்ச நேரத்துல
தந்தானன்னா
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே
தரன்னான்னன்னா

ஆண் : உச்சி வெயில் சாயும் நேரம்
உதட்டோரம் ஈரம் ஏறும்

பெண் : பச்சைப் புல்லும் பாயா மாறும்
பசி ஏக்கம் தானாத் தீரும்

ஆண் : ஓர விழி பார்க்கும் பார்வை
போதை ஏறுது

பெண் : நூறு முறை சேர்ந்த போதும்
ஆசை கூடுது

ஆண் : பொழுதாச்சு விளையாட
ஒரு வாடைக் காத்து
சூடு ஏத்தும்

பெண் : விளக்கு வச்ச நேரத்துல
மாமன் வந்தான்
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே
தாகம் என்றான்

தந்தன தந்தனனா
தந்தன தந்தனனா

தந்தன் தந்தன்
தந்தன் தந்தன் தந்தன்னா
தந்தன் தந்தன்
தந்தன் தந்தன் தந்தன்னா

தந்தன தந்தன தானானா
தந்தன் தந்தன் தானானா
தந்தன தந்தன தானானா
தந்தன் தந்தன் தானானா

தந்தன தந்தனனா
தந்தன தந்தனனா

ஆண் : நித்தம் புது ராகம் கண்டு
நான் பாடும் பாடல் நூறு

பெண் : நீ படிச்ச வேகம் கண்டு
நிலை மாறும் தேகம் பாரு

ஆண் : நீல மயில் தோகை சூடி
ஜாகை தேடுது

பெண் : ஜாதி மலர் தேனில் ஊற
ஜாடை கூறுது

ஆண் : பொழுதாச்சு விளையாட
ஒரு வாடைக் காத்து
சூடு ஏத்தும்

ஆண் : விளக்கு வச்ச நேரத்துல
தந்தானன்னா
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே
தரன்னான்னன்னா

பெண் : நான் கொடுக்க அவன் குடிக்க
அந்த நேரம் தேகம் சூடு ஏற

பெண் : விளக்கு வச்ச நேரத்துல
மாமன் வந்தான்
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே
தாகம் என்றான்

*****
3. வா வா வாத்தியாரே வா
படம் : முந்தானை முடிச்சு (1983)
பாடியவர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா
இசை : இளையராஜா
இயற்றியவர் : கங்கை அமரன்

வீடியோ


குழு : ஹா ஹா
ம்ம்ம்

ா ஹான்

ா ஹா ஹா ஹா

பெண் : வா வா
வா வா வாத்தியாரே வா
வஞ்சிக் கொடி
உன் கொஞ்சும் கிளி
உன் இஷ்டபடி
என்னை கட்டிப்புடி
அட நீயாச்சி நானாச்சு

ஆண் : அட டா டா வா வா
அடி ஆத்தி ஆத்தி
வஞ்சிக்கொடி
என் கொஞ்சும் கிளி
உன் இஷ்டப்படி
என்னை கட்டிப்புடி
அட நீயாச்சி நானாச்சு

ஆண் : தங்க நிறம் இடுப்புல
தாமரைப்பூ சிரிப்புல
சிக்கிகிட்டு ஆடுதடி
இந்த மனசு

பெண் : சம்மதிச்சேன் மறுக்கல
சத்தியமா வெறுக்கல
உன்ன எண்ணி ஏங்குது
இந்த வயசு

ஆண் : ஏய் வெட்ட வெளி புல்லுதான்
கட்டில் எதுக்கு

பெண் : ஹோய்

ஆண் : கொட்டி வச்ச
மல்லிகை மெத்தை இருக்கு

பெண் : ஹான்
வெட்ட வெளி புல்லுதான்
கட்டில் எதுக்கு
கொட்டி வச்ச மல்லிகை
மெத்தை இருக்கு

ஆண் : ஏய் தொட்டுக்குவோம்
ஒட்டிக்குவோம்
தூக்கத்துல
கட்டிக்குவோம்
யாரு நம்ம கேக்குறது
ஜாடையில பாக்குறது

பெண் : வா வா வா வாத்தியாரே வா
வஞ்சிக்கொடி
உன்கொஞ்சும் கிளி
உன் இஷ்டபடி
என்னை கட்டிப்புடி
அட நீயாச்சி நானாச்சு
ஹோய்

பெண் : ஆசைக்கொரு வேலி இல்லை
அங்க நின்னா ஜாலி இல்லை
இப்போ வேற வேலை இல்ல
ரெண்டு பேருக்கும்

ஆண் : ஆத்தங்கரை ஓரத்துல
யாருமில்லா நேரத்துல
கண்டு விட வேணுமடி
அந்த நெருக்கம்

பெண் : மன்மதனும் இருப்பான்
உன் நிறத்திலே
உன் மகனும் பொறப்பான்
என் வயத்துலே

ஆண் : ஹா ஹா மன்மதனும் இருப்பான்
என் நிறத்திலே
என் மகனும் பொறப்பான்
உன் வயத்துலே

பெண் : ஆதி முதல் அந்தம் வர
பாக்க இங்கு வந்தவரை
ஆதரிக்க ஆசை உண்டு
ஆனந்தமும் கோடி உண்டு

ஆண் : வா வா அடி ஆத்தி ஆத்தி
வஞ்சிக்கொடி
என் கொஞ்சும் கிளி
உன் இஷ்டப்படி
என்னை கட்டிப்புடி
அட நீயாச்சி நானாச்சு

பெண் : அட அட வா வா வா
வாத்தியாரே வா
வஞ்சிக்கொடி
உன்கொஞ்சும் கிளி
உன் இஷ்டபடி
என்னை கட்டிப்புடி
அட நீயாச்சி நானாச்சு

குழு : தன தன்னானனா
தன தன்னானனா
தன தன்னான தனனானா
தன தன்னானனா
தன தன்னானனா
தன தன்னான தனனானா

*****
4. கண்ண தொறக்கணும் சாமி
படம் : முந்தானை முடிச்சு (1983)
பாடியவர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி
இசை : இளையராஜா
இயற்றியவர் : கங்கை அமரன்

வீடியோ


பெண் : ஆரீரோ ஆரீரோ

(டயலாக்)

பெண் : ஆரீரோ
ஆராரோ
ஆரிராரோ

பெண் : கண்ண தொறக்கணும் சாமி
கைய புடிக்கணும் சாமி
கண்ண தொறக்கணும் சாமி
கைய புடிக்கணும் சாமி
இது வானம் பாக்குற பூமி
வந்து சேர்ந்து விளச்சல காமி

பெண் : கண்ண தொறக்கணும் சாமி
கைய புடிக்கணும் சாமி
கண்ண தொறக்கணும் சாமி
கைய புடிக்கணும் சாமி

பெண் : வாலிபம் வாடுமே
வாடையும் கூடுமே

பெண் : சாமிய கூடினா
சங்கடம் ஓடுமே

பெண் : வாலிபம் வாடுமே
வாடையும் கூடுமே
சாமிய கூடினா
சங்கடம் ஓடுமே

பெண் : தயக்கம் ஆகாது
தாமதம் கூடாது
தேகம்தான் வாடுது
வாங்களேன்
அருள் தரும் திருக்கடலே
அரிக்குது என் உடலே
மோகம் தீர
மோட்சம் தாராயோ

ஆண் : வேணாண்டி ஆம்பளை பாவம்

பெண் : ஆ

ஆண் : வாங்காத என்னோட சாபம்

ஆண் : ஏய் வேணாண்டி
ஆம்பளை பாவம்

பெண் : ஆ

ஆண் : வாங்காத என்னோட சாபம்
ஏய்
கலையாது எந்தவம் அடியே
இறங்காது பாய்மர கொடியே

ஆண் : ஹேய்
வேணாண்டி ஆம்பளை பாவம்

பெண் : ஹஹஹ

ஆண் : வாங்காத என்னோட சாபம்

பெண் : ஏ ஏ ஏய்ய்ய்ய்

பெண் : மெத்த நான் போடுறேன்
பித்தனே ஓடி வா

பெண் : முத்தமே மாலையாய்
மொத்தமா சூட வா

பெண் : மெத்த நான் போடுறேன்
பித்தனே ஓடிவா
முத்தமே மாலையாய்
மொத்தமா சூட வா

ஆண் : ஹேய் பக்தி மாறாது
பஜனையும் நிக்காது
என் தேகம் தீண்டாதே மயிலே

பெண் : புடிச்சது புடிச்சது தான்
ஏய் ஏய் ஏய் ஏய்
புரிஞ்சிக்க என் குணம்தான்

ஆண் : பாதை மாறி
போக மாட்டேண்டீ

பெண் : கண்ண தொறக்கணும் சாமி

ஆண் : ஹைய்யோ

பெண் : கைய புடிக்கணும் சாமி

ஆண் : அடி..வேணாண்டி
ஆம்பளை பாவம்

பெண் : ஹா

ஆண் : வாங்காத என்னோட சாபம்

பெண் : இது வானம் பாக்குற பூமி
வந்து சேர்ந்து விளச்சல காமி
கண்ண தொறக்கணும் சாமி

ஆண் : ஹைய்யோ

பெண் : கைய புடிக்கணும் சாமி

ஆண் : எம்மா

பெண் : கண்ண தொறக்கணும் சாமி

ஆண் : ம்ம்ஹும்

பெண் : கைய புடிக்கணும் சாமி

ஆண் : அய்யோ

*****
5. சின்னஞ்சிறு கிளியே
படம் : முந்தானை முடிச்சு (1983)
பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி
இசை : இளையராஜா
இயற்றியவர் : முத்துலிங்கம்

வீடியோ


பெண் : ஆரிராரிரோ ஆரிராரிரோ
ஆரிராரிரோ ஆரிராரிரோ
ஆரிராரிரோ ஆரிராரிரோ

பெண் : சின்னஞ்சிறு கிளியே
சித்திரப் பூவிழியே
சின்னஞ்சிறு கிளியே
சித்திரப் பூவிழியே
அன்னை மணம் ஏங்கும்
தந்தை மணம் தூங்கும்
நாடகம் ஏனடா
நியாயத்தை கேளடா
சின்னஞ்சிறு கிளியே

பெண் : சுகமே நினைத்து
சுயம்வரம் தேடி
உடனே தவிக்கும்
துயரங்கள் கோடி
மழை நீர் மேகம்
விழிகளில் மேவும்
இந்த நிலை மாறுமோ
அன்பு வழி சேருமோ
கண்கலங்கி பாடும்
எனது பாசம்
உனக்கு வேஷமோ
வாழ்ந்தது போதுமடா
வாழ்க்கை இனியேன்

பெண் : சின்னஞ்சிறு
ஆண் : சின்னஞ்சிறு கிளியே
சித்திரப் பூவிழியே
சின்னஞ்சிறு கிளியே
சித்திரப் பூவிழியே
உன்னை எண்ணி நானும்
உள்ளம் தடுமாறும்
வேதனை பாரடா
வேடிக்கை தானடா
சின்னஞ்சிறு கிளியே

ஆண் : மயிலே உன்னை நான்
மயக்கவும் இல்லை
மனதால் என்றும்
வெறுக்கவும் இல்லை
என்னை நீ தேடி
இணைந்தது பாவம்
எல்லாம் நீயே
எழுதிய கோலம்
இந்த நிலை
காணும் பொழுது
நானும் அழுது வாழ்கிறேன்
காலத்தின் தீர்ப்புகளை
யாரறிவாரோ ஓஓ

பெண் : சின்னஞ்சிறு கிளியே
சித்திரப் பூவிழியே

ஆண் : உன்னை எண்ணி நானும்
உள்ளம் தடுமாறும்

பெண் : நாடகம் ஏனடா
நியாயத்தை கேளடா

ஆண் : சின்னஞ்சிறு கிளியே

. பெண் : சித்திரப் பூவிழியே

*****
6. நான் புடிக்கும் மாப்பிள்ளைதான்
படம் : முந்தானை முடிச்சு (1983)
பாடியவர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு
இசை : இளையராஜா
இயற்றியவர் : புலமைப்பித்தன்

வீடியோ


பெண் : ஹான் நான் புடிக்கும்
மாப்பிள்ளைதான்
நாடறிஞ்ச மன்மதன்டா

ஆண் : ஆஹா அபாரம் பரிமளா

ஆண் : மேல சொல்லு

பெண் : நான் புடிக்கும்
மாப்பிள்ளைதான்
நாடறிஞ்ச மன்மதன்டா
நான் போடுற கோட்டுக்குள்ள
கட்டுப்பட்டு வாழணும் வீட்டுக்குள்ள
நான் கைக்கட்டி வாய்பொத்தி
நில்லுன்னா நிக்கணும் டோய்
குழு : அடடடட

பெண் : நான் புடிக்கும்
மாப்பிள்ளை தான்
நாடறிஞ்ச மன்மதன்டா
நான் போடுற கோட்டுக்குள்ள
குழு : கட்டுப்பட்டு

பெண் : வாழணும் வீட்டுக்குள்ள
நான் கைக்கட்டி வாய்பொத்தி
நில்லுன்னா நிக்கணும் டோய்

குழு : அடடடட

பெண் : மூஞ்சிய தூக்காம
காஞ்சிப்புரம் பட்டு வாங்கி
கொடுக்கணும் டோய்

குழு : ஆமாமாமா
வாங்கி கொடுக்கணும் டோய்

பெண் : ராத்திரி ஷோவுக்கு
டூரிங் டாக்கீஸ்
கூட்டிட்டு போகணும் டோய்

குழு : எங்களையும்
கூட்டிட்டு போகணும் டோய்

பெண் : ஹாங்

பெண் : சாமத்தில கால் வலிச்சா
நீவி விட கத்துக்கணும்
சேவல் கோழி
கூவும் முன்னே
வாசலையும் கூட்டணும் டோய்

ஆண் : ஆஹா மொத்தத்தில்
பொண்டாட்டி நீயில்ல
மாப்பிள்ளை டோய்

குழு : டும் டும் டும் டும் டும்

பெண் : நான் புடிக்கும்
மாப்பிள்ளை தான்
நாடறிஞ்ச மன்மதன்டா
நான் போடுற கோட்டுக்குள்ள

குழு : கட்டுப்பட்டு

பெண் : வாழணும் வீட்டுக்குள்ள
நான் கைக்கட்டி வாய்பொத்தி
நில்லுன்னா நிக்கணும் டோய்
குழு : அடடடட

பெண் : மாமான்னு கூப்பிட்டா
ஏமான்னு கேட்காம
தாப்பாள போடணும் டோய்

குழு : ஆமாமாமா
தாப்பாள போடணும் டோய்

(வசனம் ஆண்: கொஞ்சம் இரு
கொஞ்சம் இரு
தாப்பாளா அது எதுக்கு?
ஆண்: டேய், நீ சின்னப் பையன்
உனக்கு வயசு பத்தாது
சும்மா இருரா
பரிமளா நீ பாடும்மா)

பெண் : மாமான்னு கூப்பிட்டா
ஏமான்னு கேட்காம
தாப்பாள போடணும் டோய்

குழு : ஆமாமாமா
தாப்பாள போடணும் டோய்

பெண் : மானுன்னு தேனுன்னு
மல்லிகை பூ வச்சு
மாருல சாய்க்கணும் டோய்

குழு : ஆமாமாமா மாருல
சாய்க்கணும் டோய்

பெண் : ஆம்பிள்ளத்தான் பெத்துக்கணும்
ஆரிராரோ பாடிக்கணும்
ஊர் உலகம் மெச்சும்படி
மாமி என்ன வச்சுக்கணும்

(வசனம் ஆண் : எல்லாம் சரி பரிமளா
ஆனா முக்கியமான
ஒன்ன விட்டுட்டியே
பெண்: எத)

ஆண் : ஒரு வப்பாட்டி கிப்பாட்டி
வைக்காம பாத்துக்கணும்

பெண் : ஆமாமாமா

பெண் : நான் புடிக்கும்
மாப்பிள்ளை தான்
நாடறிஞ்ச மன்மதன்டா
நான் போடுற கோட்டுக்குள்ள

குழு : கட்டுப்பட்டு

பெண் : வாழணும் வீட்டுக்குள்ள
நான் கைக்கட்டி வாய்பொத்தி
நில்லுன்னா நிக்கணும் டோய்

குழு : அடடடட

பெண் : நான் புடிக்கும்
மாப்பிள்ளை தான்
நாடறிஞ்ச மன்மதன்டா
நான் புடிக்கும்
மாப்பிள்ளை தான்

*****