|
|
ஆண் பாவம் ![]() நடிப்பு
பாண்டியராஜன், பாண்டியன், ரேவதி, சீதா, வி. கே. ராமசாமி, ஜனகராஜ், ஐ.எஸ். முருகேசன், பூர்ணம் விஸ்வநாதன், ‘சூப்பர்’ சுப்பராயன், கொல்லங்குடி கருப்பாயி, உசிலை மணி, ‘பசி’ நாராயணன், ரமேஷ் கண்ணா, ஓமக்குச்சி நரசிம்மன், ஹாஜா செரீப்நெல்லை சிவா, ‘தவக்களை’ சிட்டிபாபுஇசை
இளையராஜாபாடல்கள்
வாலி, வைரமுத்து, குருவிகரம்பை சண்முகம்பின்னணி
எஸ். ஜானகி, மலேசியா வாசுதேவன், சித்ரா, இளையராஜாஒளிப்பதிவு
அசோக் குமார்படத்தொகுப்பு
வி. ராஜகோபால்கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
ஆர். பாண்டியராஜன்தயாரிப்பு
திருமதி ஈஸ்வரி சுப்ரமணியம்தயாரிப்பு நிறுவனம்
அலமு மூவீஸ்வெளீயீடு: 7 டிசம்பர் 1985வீடியோ *****
பாடல்கள்
1. இந்திரன் வந்ததும்
படம் : ஆண் பாவம் (1985) பாடியவர்கள் : இளையராஜா மற்றும் குழு இசை : இளையராஜா இயற்றியவர் : வைரமுத்து வீடியோ குழு : வந்தனம் வந்தனம் ஆண் : வந்த சனமெல்லாம் குழு : குந்தணும் குந்தணும் ஆண் : இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமா தான் இங்க எம்ஜிஆர் வந்ததும் என்டிஆர் வந்ததும் இந்தச் சினிமா தான் குழு : இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமா தான் இங்க எம்ஜிஆர் வந்ததும் என்டிஆர் வந்ததும் இந்தச் சினிமா தான் ஆண் : கலை வளர்ந்ததும் குழு : இங்கே தான் ஆண் : காதல் சொன்னதும் குழு : இங்கே தான் ஆண் : கலை வளர்ந்ததும் குழு : இங்கே தான் ஆண் : காதல் சொன்னதும் குழு : இங்கே தான் ஆண் : கட்சி வளர்த்ததும் ஆட்சி புடிச்சதும் இந்தச் சினிமா தான் அட அமெரிக்காவுல ஆட்சி அமைச்சதும் இந்தச் சினிமா தான் குழு : கட்சி வளர்த்ததும் ஆட்சி புடிச்சதும் இந்தச் சினிமா தான் அட அமெரிக்காவுல ஆட்சி அமைச்சதும் இந்தச் சினிமா தான் ஆண் மற்றும் குழு: ஏ இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமா தான் இங்க எம்ஜிஆர் வந்ததும் என்டிஆர் வந்ததும் இந்தச் சினிமா தான் ஆண் : கைலாச நாதன முருகனக் கண்ணால பாக்கத்தான் முடியுமா கூறு அம்பத்தஞ்சு காசு நீ குடுத்துட்டா தன்னால கடவுளப் பாக்கலாம் பாரு ஆண் : காத்தவராயன் குழு : மதுர வீரன் ஆண் : தெரையிலதானே குழு : புரிஞ்சிருச்சு ஆண் : காந்தியக் கூட படத்துலதானே இன்னைக்கு தேசம் குழு : தெரிஞ்சிருச்சு ஆண் : அட பசி தூக்கம் பறந்தாச்சு பழசெல்லாம் மறந்தாச்சு கொட்டக வளந்த பெறகு நாட்டுல குத்தம் கொறஞ்சிருக்கு குழு: அட கொட்டக வளந்த பெறகு நாட்டுல குத்தம் கொறஞ்சிருக்கு ஆண் மற்றும் குழு: ஏ இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமா தான் இங்க எம்ஜிஆர் வந்ததும் என்டிஆர் வந்ததும் இந்தச் சினிமா தான் ஆண் : கலை வளர்ந்ததும் குழு : இங்கே தான் ஆண் : காதல் சொன்னதும் குழு : இங்கே தான் ஆண் : கலை வளர்ந்ததும் குழு : இங்கே தான் ஆண் : காதல் சொன்னதும் குழு : இங்கே தான் ஆண் மற்றும் குழு : கட்சி வளர்த்ததும் ஆட்சி புடிச்சதும் இந்தச் சினிமா தான் அட அமெரிக்காவுல ஆட்சி அமைச்சதும் இந்தச் சினிமா தான் ஆண் : எத்தனையோ மேதைங்க ஞானிங்க வீரங்க வெள்ளித்திரை தந்தது இங்கே அரிச்சந்திரன் நாடகம் பாத்துத்தான் காந்தியும் சத்தியத்த நம்பினார் அங்கே ஆண் : கிசுகிசு குழு : போட்டு ஆண் : கேள்வி பதில் குழு : போட்டு ஆண் : பத்திரிக்க வந்தா குழு : லாபமுங்க ஆண் : வாழ்க்கைக்கு குழு : இங்கே ஆண் : வடிகால் குழு : வேணும் ஆண் : சினிமா ஒண்ணு குழு : போதுமுங்க ஆண் : அட பகலெல்லாம் உழைச்சீங்க இரவெல்லாம் சிரிச்சீங்க வெள்ளித் திரையில தங்கம் வெளஞ்சது எங்க சினிமாதான் குழு : அட வெள்ளித் திரையில தங்கம் வெளஞ்சது எங்க சினிமாதான் ஆண் : இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமாதான் இங்க எம்ஜிஆர் வந்ததும் என்டிஆர் வந்ததும் இந்தச் சினிமாதான் குழு : இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமாதான் இங்க எம்ஜிஆர் வந்ததும் என்டிஆர் வந்ததும் இந்தச் சினிமாதான் ஆண் : கலை வளர்ந்ததும் குழு : இங்கே தான் ஆண் : காதல் சொன்னதும் குழு : இங்கே தான் ஆண் : கலை வளர்ந்ததும் குழு : இங்கே தான் ஆண் : காதல் சொன்னதும் குழு : இங்கே தான் ஆண் : கட்சி வளர்த்ததும் ஆட்சி புடிச்சதும் இந்தச் சினிமா தான் அட அமெரிக்காவுல ஆட்சி அமைச்சதும் இந்தச் சினிமா தான் குழு : கட்சி வளர்த்ததும் ஆட்சி புடிச்சதும் இந்தச் சினிமா தான் அட அமெரிக்காவுல ஆட்சி அமைச்சதும் இந்தச் சினிமா தான் ஆண் மற்றும் குழு: ஹே தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தானா அட தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தானா *****
2. காதல் கசக்குதய்யா
படம் : ஆண் பாவம் (1985) பாடியவர் : இளையராஜா இசை : இளையராஜா இயற்றியவர் : வாலி வீடியோ வர வர காதல் கசக்குதய்யா மனம் தான் லவ் லவ்வுன்னு அடிக்கும் லவ்வுன்னுதான் துடிக்கும் தோத்து போனா குடிக்கும் பைத்தியம் புடிக்கும் காதல் கசக்குதய்யா வர வர காதல் கசக்குதய்யா யாராரோ காதலிச்சு யாராரோ காதலிச்சு உருப்படல ஒண்ணும் சரிப்படல வாழ்கையிலே என்றும் சுகப்படல காதல்ல படம் எடுத்தா ஓடுமுங்க தியேட்டரிலே ஜனம் கூடுமுங்க தேவதாஸ் அவன் பார்வதி அம்பிகாபதி அமராவதி கதைய கேளு முடிவ பாரு கடைசியில் சேராம வாழாம செத்தாங்க எனக்கிந்த காதல் கசக்குதய்யா வர வர காதல் கசக்குதய்யா மனம் தான் லவ் லவ்வுன்னு அடிக்கும் லவ்வுன்னுதான் துடிக்கும் தோத்து போனா குடிக்கும் பைத்தியம் புடிக்கும் காதல் கசக்குதய்யா எத்தனை சினிமா எத்தனை டிராமா பாத்தாச்சு எத்தனை டூயட் எத்தனை டியூன் கேட்டாச்சு எத்தனை பாட்டு இத்தனை கேட்டு என்னாச்சு புத்தியும் கெட்டு சக்தியும் கெட்டு நின்னாச்சு கிட்டப்பா அந்த காலத்துல காயாத கானகத்தே பி யூ சின்னப்பா வந்த காலத்துல காதல் கனி ரசமே மன்மத லீலை எம் கே டி காலத்துல நடையா இது நடையா நம்ம நடிகர் திலகம் பாணியிலே ஹலோ ஹலோ சுகமா அட ஆமாம் நீங்க நலமா எங்கேயும் தான் கேட்டோம் அண்ணன் எம்ஜிஆர் பாட்டுக்கள இந்த கால இளைஞர் செய்யும் காதலுக்கு இளையராஜா எந்தன் பாட்டிருக்கு வீட்டுல அதை பாடுங்க பொண்டாட்டிய லவ் பண்ணுங்க நம்ம தகப்பன் பேச்ச தாயின் பேச்ச மதிக்கணும் நீயாக பெண் தேட கூடாது எனக்கிந்த காதல் கசக்குதய்யா வர வர காதல் கசக்குதய்யா மனம்தான் லவ் லவ்வுன்னு அடிக்கும் லவ்வுன்னுதான் துடிக்கும் தோத்து போனா குடிக்கும் பைத்தியம் புடிக்கும் காதல் மோதல் காதல் காதல் காதல் கசக்குதய்யா கசக்குதய்யா கசக்குதய்யா *****
3. என்ன பாடச் சொல்லாதே
படம் : ஆண் பாவம் (1985) பாடியவர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு இசை : இளையராஜா இயற்றியவர் : வாலி வீடியோ நான் கண்டபடி பாடிப்புடுவேன் பெண் : என்ன பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிப்புடுவேன் என்ன பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிப்புடுவேன் பெண் : அதக் கேட்டா மடையனுக்கும் ஞானம் பொறந்திடும் மூடிக் கெடக்கும் பல கண்ணும் தொறந்திடும் கேட்டா மடையனுக்கும் குழு : ஞானம் பொறந்திடும் பெண் : அட மூடிக் கெடக்கும் பல குழு : கண்ணும் தொறந்திடும் பெண் : பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிப்புடுவேன் பெண் : தேவாரமும் படிச்சோம் திருவாசகம் படிச்சோம் தெரியாம திருக்குறளும் தான் படிச்சோம் ஆனான படிப்பை எல்லாம் அன்னாடம் படிச்சிப்புட்டு புரியாம தெரியாம தான் முழிச்சோம் அறிவான ஆத்திச்சூடி கொடுத்தாளே அவ்வைப்பாட்டி அதக்கூட பாடி என்ன கிழிச்சிப்புட்டோம் குழு : அறிவான ஆத்திச்சூடி கொடுத்தாளே அவ்வைப்பாட்டி அதக்கூட பாடி என்ன கிழிச்சிப்புட்டோம் பெண் : நாடும் என்னாச்சு நம்ம ஊரும் என்னாச்சு அட பேசிப் பேசித்தான் நல்ல பொழுதும் போயாச்சு இந்த தேசம் ரொம்ப மோசம் இதப் பார்க்கும்போது இப்ப பெண் : என்னப் பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிப்புடுவேன் என்ன பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிப்புடுவேன் பெண் : காம்போதியும் தெரியும் கல்யாணியும் புரியும் பொதுவாக நெனச்சதும் நான் பாட்டெடுப்பேன் ஆகாத பொழப்பை எல்லாம் அநியாய நடப்பை எல்லாம் அஞ்சாம என் பாட்டில் போட்டுடைப்பேன் பெண் : நாய் வால நிமிர்த்துறதும் காக்காய வெளுக்குறதும் அம்மாடி யாரால ஆகும் இப்போ குழு : நாய் வால நிமிர்த்துறதும் காக்காய வெளுக்குறதும் அம்மாடி யாரால ஆகும் இப்போ பெண் : பார்க்கப் போனாக்க நான் பொட்டப் புள்ள தான் அட போட்டிப் போட்டாக்க ரொம்ப கெட்டப் புள்ள தான் ஒரு வேகம் ஒரு கோபம் ஒண்ணு சேரும்போது இப்ப பெண் : என்னப் பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிப்புடுவேன் என்ன பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிப்புடுவேன் பெண் : அதக் கேட்டா மடையனுக்கும் குழு : ஞானம் பொறந்திடும் பெண் : மூடிக் கெடக்கும் பல குழு : கண்ணும் தெறந்திடும் பெண் : பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிப்புடுவேன் *****
4. குயிலே குயிலே பூங்குயிலே
படம் : ஆண் பாவம் (1985) பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா இசை : இளையராஜா இயற்றியவர் : வாலி வீடியோ மயிலே மயிலே வா மயிலே குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே ஒரு பூஞ்சோலையே உனக்காகதான் பூத்தாடுதே வா... வா... பெண் : குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே ஒரு பூஞ்சோலையே உனக்காகதான் பூத்தாடுதே வா... வா... ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே ஆண் : தொட்டாலே நீ சிணுங்கும் அழகு ஒன்ன தொட்டாலே சிலிர்க்குதடி பெண் : பட்டாலே பத்திக் கொள்ளும் காதல் இது ஒட்டாதே தள்ளி நில்லு ஆண் : சிட்டுக்கொரு பட்டுத் துணி கட்டித் தரவா மொட்டுகென முத்துச் சரம் கொட்டித் தரவா பெண் : ஒட்டிக்கிற கட்டிகிற சிட்டுக் குருவி கட்டுக்கத விட்டு ஒரு பாட்டா படிக்கும் ஆண் : நெஜமா நெஜமா நான் தவிச்சேன் ஒன்னையே நெனச்சி உயிர் வளர்த்தேன் பெண் : இது ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்நாளும் உள்ள கதை ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே பெண் : ஒரு பூஞ்சோலையே உனக்காகதான் பூத்தாடுதே வா... வா... ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே பெண் : ராசாதி ராசனத்தான் கட்டிக்கொள்ள ராசாத்தி ஆசைப் பட்டா ஆண் : ராசாத்தி என்ன செய்வா அவளுக்குன்னு ராசாவா நான் பொறந்தா பெண் : அன்னைக்கொரு எழுத்த எனக்கெழுதிபுட்டான் இன்னைக்கு அத அழிச்சா அவன் எழுதப் போறான் ஆண் : பெண்ணே பழி அவன் மேலே சொல்லாதடி ஆண் பாவம் பொல்லாதது கொல்லாதடி பெண் : தவறோ சரியோ விதி இது தான் சரி தான் சரி தான் வழக்கெதுக்கு ஆண் : இது ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்நாளும் உள்ள கதை பெண் : குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே ஆண் : ஒரு பூஞ்சோலையே உனக்காகதான் பூத்தாடுதே வா... வா... பெண் : குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே *****
5. ஒட்டி வந்த சிங்க குட்டி
படம் : ஆண் பாவம் (1985) பாடியவர் : கொல்லங்குடி கருப்பாயி இசை : இளையராஜா இயற்றியவர் : குருவிக்கரம்பை சண்முகம் குத்து சண்டை போடலாமா பெத்தப்பன் வீட்டு வழியா பெரும பேசுறான் சினிமா கொட்டைகைய கட்டி வச்சு முட்டிக்கலாமா நீங்க முட்டிக்கலாமா தலைய முட்டிக்கலாமா ஆ... கூத்து பாக்க அவருவானா தன்னான்னே னானே கோடி சனம் கூட வரும் தில்லாலே லேலே கூத்து பாக்க அவருவானா தன்னான்னே னானே கோடி சனம் கூட வரும் தில்லாலே லேலே ஆத்து பக்கம் அவருவானா தன்னான்னே னானே ஆகாசமும் கொட புடிக்கு தில்லாலே லேலே ஆத்து பக்கம் அவருவானா தன்னான்னே னானே ஆகாசமும் கொட புடிக்கு தில்லாலே லேலே திருப்பதியில் நிப்பார் பாரு தன்னான்னே னானே அஞ்சோடு ரெண்டு சேர்ந்தா அவர் பேரு தானே திருப்பதியில் நிப்பார் பாரு தன்னான்னே னானே அஞ்சோடு ரெண்டு சேர்ந்தா அவர் பேரு தானே அஞ்சோடு ரெண்டு சேர்ந்தா அவர் பேரு தானே பேராண்டி பேரான்டி பொண்ணு மனம் பாரான்டி பேராண்டி பேரான்டி பொண்ணு மனம் பாரான்டி குலம் வெளங்க வந்தான்டி கொலை செய்ய வாரான்டி குலம் வெளங்க வந்தான்டி கொலை செய்ய வாரான்டி கொலை செய்ய வாரான்டி வண்டி கட்டி போறான் ஆண்டி ரெண்டும் கெட்டும் ஆனான்டி வண்டி கட்டி போறான் ஆண்டி ரெண்டும் கெட்டும் ஆனான்டி ஒண்டி கட்ட பேரான்டி ஊமை பொண்ண கட்டி வாடா ஒண்டி கட்ட பேரான்டி ஊமை பொண்ண கட்டி வாடா ஊமை பொண்ண கட்டி வாடா சாயத்துல சரிகச் சேலை சமஞ்ச பொண்ணு கட்டும் சேலை சாயத்துல சரிகச் சேலை சமஞ்ச பொண்ணு கட்டும் சேலை ஊரை எல்லாம் மயங்க வைக்கும் சேலை இது இப்போ ஒய்யாரி கட்டும் சேலை பேரான்டி இப்போ ஒய்யாரி கட்டும் சேலை பேரான்டி பல்லு போகும் வயசில் அவன் பல்லு போகும் வயசில் அவன் சிலுக்கு சேலை வேணும்மாடா பல்லு போகும் வயசிலே ராசாவே எனக்கு சிலுக்கு சேலை வேணும்மாடா பேரான்டி எனக்கு சிலுக்கு சேலை வேணும்மாடா பேரான்டி காளை வயிறு காளை கண்ணாடி மயில காளை நினைப்பை எல்லாம் மேய விட்டு மசக்கி நிக்கும் சூர காளை நினைப்பை எல்லாம் மேய விட்டு மசக்கி நிக்கும் சூர காளை அரவப்பட்டி ஓரத்துல ஆத்தோர தோப்புக்குள்ள அரவப்பட்டி ஓரத்துல ஆத்தோர தோப்புக்குள்ள பரிசம் போட போன பொண்ணு ஒம் மனசுக்குள்ள நிக்கிறாளா பரிசம் போட போன பொண்ணு ஒம் மனசுக்குள்ள நிக்கிறாளா ஒம் மனசுக்குள்ள நிக்கிறாளா *****
|