இதய கோயில்

idaya kovil
நடிப்பு
மோகன், அம்பிகா, ராதா, கவுண்டமணி, கபில்தேவ், ஏ.ஆர்.எஸ்., ஜி. சீனிவாசன், ஐ.எஸ். முருகேஷ், இயக்குநர் ரா.சங்கரன், செந்தில், ஒரு விரல் கிருஷ்ணா ராவ், டைப்பிஸ்ட் கோபு, உசிலை மணி, ‘பசி’ நாராயணன், சார்லி, தியாகு, சின்னி ஜெயந்த், காஜா ஷெரிப், ஓமக்குச்சி நரசிம்மன், மதன் பாப்

இசை
இளையராஜா

பாடல்கள்
வாலி, முத்துலிங்கம், நா.காமராசன், வைரமுத்து, மு.மேத்தா, பாவலர் வரதராஜன், இளையராஜா

ஒளிப்பதிவு
ராஜராஜன்

படத்தொகுப்பு
B. லெனின், V.T. விஜயன்

நடனம்
சுந்தரம்

நகைச்சுவை பகுதி
A. வீரப்பன்

கதை
R. செல்வராஜ்

திரைக்கதை, வசனம்
M.G. வல்லபன்

இயக்கம்
மணி ரத்னம்

தயாரிப்பு
கோவைத்தம்பி

தயாரிப்பு நிறுவனம்
மதர்லேண்ட் பிக்சர்ஸ்

வெளீயீடு:
13 செப்டம்பர் 1985

*****
பாடல்கள்
1. வானுயர்ந்த சோலையிலே
படம் : இதய கோயில் (1985)
பாடியவர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்
இசை : இளையராஜா
இயற்றியவர் : பாவலர் வரதராஜன்

வீடியோ


ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ

வானுயர்ந்த சோலையிலே
நீ நடந்த பாதையெல்லாம்
வானுயர்ந்த சோலையிலே
நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன்
நாவறண்டு பாடுகின்றேன்
நானிருந்து வாடுகின்றேன்
நாவறண்டு பாடுகின்றேன்
வானுயர்ந்த சோலையிலே

வாழ்வான வாழ்வெனக்கு
வந்ததென்று நானிருந்தேன்
பாழான நாளிதென்று
பார்த்தவர்கள் கூறவில்லை
வாழ்வான வாழ்வெனக்கு
வந்ததென்று நானிருந்தேன்
பாழான நாளிதென்று
பார்த்தவர்கள் கூறவில்லை
தேனாகப் பேசியதும்
சிரித்து விளையாடியதும்
தேனாகப் பேசியதும்
சிரித்து விளையாடியதும்
வீணாகப் போகுமென்று
யாரேனும் நினைக்கவில்லை

வானுயர்ந்த சோலையிலே
நீ நடந்த பாதையெல்லாம்
வானுயர்ந்த சோலையிலே
நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன்
நாவறண்டு பாடுகின்றேன்
வானுயர்ந்த சோலையிலே

ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ

ஆற்றங்கரை ஓரத்திலே
யாருமற்ற நேரத்திலே
வீற்றிருந்த மணற்பரப்பு
வேதனையைத் தூண்டுதடி
ஆற்றங்கரை ஓரத்திலே
யாருமற்ற நேரத்திலே
வீற்றிருந்த மணற்பரப்பு
வேதனையைத் தூண்டுதடி
பூத்திருந்த மலரெடுத்து
பூங்குழலில் சூடி வைத்து
பூத்திருந்த மலரெடுத்து
பூங்குழலில் சூடி வைத்து
பார்த்திருந்த கோலமெல்லாம்
பழங்கதை ஆனதடி

வானுயர்ந்த சோலையிலே
நீ நடந்த பாதையெல்லாம்
வானுயர்ந்த சோலையிலே
நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன்
நாவறண்டு பாடுகின்றேன்
நானிருந்து வாடுகின்றேன்
நாவறண்டு பாடுகின்றேன்
வானுயர்ந்த சோலையிலே