|
|
ரெட்டை வால் குருவி ![]() நடிப்பு
மோகன், ராதிகா, அர்ச்சனா, வி. கே. ராமசாமி, தேங்காய் சீனிவாசன், செந்தாமரை, இளையராஜாபாடல்கள்
ந. காமராஜன், மு. மேத்தா, கங்கை அமரன்இசை
இளையராஜாகதை
கௌரிஒளிப்பதிவு, படத்தொகுப்பு, திரைக்கதை, இயக்கம்
பாலு மகேந்திராதயாரிப்பு
அப்துல் காதர்தயாரிப்பு நிறுவனம்
சாகர் கம்பைன்ஸ்வெளீயீடு:
27 பிப்ரவரி 1987வீடியோ ***** பாடல்கள்
1. ராஜ ராஜ சோழன் நான்
படம் : ரெட்டை வால் குருவி (1987) இசை : இளையராஜா பாடலாசிரியர்: மு. மேத்தா பாடியவர் : கே.ஜே. யேசுதாஸ் வீடியோ எனை ஆளும் காதல் தேசம் நீ தான் ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான் பூவே காதல் தீவே மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே உல்லாச பூமி இங்கு உண்டானதே ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான் பூவே காதல் தீவே கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே கை தீண்டும் போது பாயும் மின்சாரமே உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம் இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம் இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன் அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன் உன் ராக மோகனம் என் காதல் வாகனம் செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான் பூவே காதல் தீவே கள்ளூர பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே தேனோடை ஓரமே நீராடும் நேரமே புல்லாங்குழல் தள்ளாடுமே பொன் மேனி கேளாய் ராணி ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான் ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான் பூவே காதல் தீவே மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே உல்லாச பூமி இங்கு உண்டானதே ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான் பூவே காதல் தீவே *****
|