குரு சிஷ்யன்

guru sishyan
நடிப்பு
ரஜினிகாந்த், பிரபு, சீதா, கௌதமி, பாண்டியன், சோ, ரவிச்சந்திரன், ராதாரவி, செந்தாமரை, வினுசக்கரவர்த்தி, மனோரமா

பாடல்கள்
வாலி, இளையராஜா

இசை
இளையராஜா

ஒளிப்பதிவு
டி.எஸ். விநாயகம்

படத்தொகுப்பு
ஆர். விட்டல், சி. லான்ஸி

மூலக்கதை
எம்.டி. சுந்தர்

திரைக்கதை, வசனம்
பஞ்சு அருணாசலம்

இயக்கம்
எஸ்.பி. முத்துராமன்

தயாரிப்பு
மீனா பஞ்சு அருணாசலம்

தயாரிப்பு நிறுவனம்
P.A. ஆர்ட் புரொடக்‌ஷன்ஸ்

வெளீயீடு:
13 ஏப்ரல் 1988

வீடியோ


*****

பாடல்கள்
1. கண்டு புடிச்சேன் கண்டு புடிச்சேன்
படம் : குரு சிஷ்யன் (1988)
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

வீடியோ


ஜங்குஜங்குஜான்
ஜங்குஜங்குஜான்
ஜங்குசான் ஜான்
ஜங்குஜங்குஜான்
தங்குறாதாங்குதான்
தங்குறா தங்குதான்
ஹஹ ஹாஆஆஹஹ ஹ ஹ

ஹோய் கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன்
காதல் நோயை
கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன்
காதல் நோயை
கண்டு புடிச்சேன்
சிஷ்யா சிஷ்யா
இது சரியா சரியா
மானே தேனே
மயிலே குயிலே என்று
நீ உறங்கும் போது
உளறல் கேட்டேன் அன்று

கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன்
காதல் நோயை
கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன்
காதல் நோயை
கண்டு புடிச்சேன்

மாமன் மச்சான்
அத்தான்னு சொன்னாளா
வம்பு தும்பு
ஏதாச்சும் பன்னாளா
உள்ளாற ஏதேதோ ஞாபகம்
உன் பாட்ட
நெஞ்சோடு பாடுறேன்
த்தனக்கட த்தனக்கட
த்தனக்கட தின தின

என்னான்னு ஏதுன்னு கேட்டதும்
சொல்லாமா கொள்ளாம மூடுறே
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
எத்தனைப் பேர் பார்த்திருக்கேன்
எங்கிட்ட நீ மறைக்காதே
சோத்துல முழுப் பூசணிக்காய்
மறையுமுன்னு நினைக்காதே
காதில் பூவை சுத்திப்பார்க்க
நீ தான் நினைச்சா நடக்காதே

கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன்
காதல் நோயை
கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன்
காதல் நோயை
கண்டு புடிச்சேன்
சிஷ்யா சிஷ்யா
இது சரியா சரியா
மானே தேனே
மயிலே குயிலே என்று
ஓய்... நீ உறங்கும் போது
உளறல் கேட்டேன் அன்று
தர தரத்தானத்த தானத்த தா

தினத்துன
காதல் கலையில்
நான் தான் உன் முன்னோடி
குருவை மிஞ்சும் சிஷ்யன்
நீ கில்லாடி
கொண்டாட்டம் கும்மாளம்
போடு நீ
அண்ணாச்சி என் வாழ்த்தை
ஏத்துக்கோ

த்னத்துன ஜிங்குரதான்த்தா...
ஜிங்குரதான்த்தா
பெண்டாட்டி ஆகாத காதலி
தாயாக ஆகாம பார்த்துக்கோ
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஆத்திரத்தில் துடிக்காதே
அவசரமா புடிக்காதே
தூண்டியில மீனாட்டம்
மாட்டிக்கிட்டு முழிக்காதே
திட்டம் போட்டு
வட்டம் போடு
குருவின் பேரை
கெடுக்காதே

கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன்
காதல் நோயை
கண்டு புடிச்சேன்

கண்டு புடிச்சேன்
கண்டுப் பிடிச்சேன்
காதல் நோயை
கண்டுப் பிடிச்சேன்

சிஷ்யா சிஷ்யா
இது சரியா சரியா
மானே தேனே
மயிலே குயிலே என்று
நீ உறங்கும் போது
உளறல் கேட்டேன் அன்று

ஹஹ் ஹா ஹா
கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன்
காதல் நோயை
கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன்
காதல் நோயை
கண்டு புடிச்சேன்... ஹோய்

*****
2. வா வா வஞ்சி இளம் மானே
படம் : குரு சிஷ்யன் (1988)
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ரா

வீடியோ


ஆண் : வா வா வஞ்சி
இளம் மானே

ஆண் : வா வா வஞ்சி
இளம் மானே
வந்தால் என்னைத் தருவேனே
வா வா வஞ்சி
இளம் மானே
வந்தால் என்னைத் தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக

பெண் : வந்தாள்
வஞ்சி இள மானே
கொண்டாள் உன்னை
இங்கு தானே

ஆண் : ஈரெட்டு வயதில்
ஈரத் தாமரை
வாய் விட்டுச் சிரிக்காதா

பெண் : வாய் விட்டுச் சிரிக்கும்
மாலை வேலையில்
தேன் சொட்டு தெறிக்காதா

ஆண் : தேகத்தில் உனக்கு
தேன் கூடு இருக்கு
தாகத்தை தணித்திட வா

பெண் : ஆனாலும்
நீ காட்டும் வேகம்
ஆத்தாடி ஆகாதம்மா

ஆண் : பொன்வண்டு
கூத்தாடும் போது
பூச்செண்டு நோகாதம்மா

பெண் : போதும் போதும் போ

ஆண் : வா வா வஞ்சி
இளம் மானே
வந்தால் என்னை தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக

பெண் : வந்தாள் வஞ்சி
இள மானே
கொண்டால் உன்னை
இங்கு தானே

பெண் : நான் உன்னை
நினைத்தேன்
நேத்து ராத்திரி
நூலாட்டம் இளைத்தேனே

ஆண் : நான் கூட தவித்தேன்
வேறு மாதிரி
பாலாட்டம் கொதித்தேனே

பெண் : ஆசைகள் எனக்கும்
அங்கங்கே சுரக்கும்
ஆளைத்தான் அசத்துவதேன்

ஆண் : பொன் வண்டு
கூத்தாடும் போது
பூச்செண்டு நோகாதம்மா

பெண் : கால் மீது
கால் போட்டு ஆட
கல்யாண நாள் இல்லையா

ஆண் : நேரம் காலம் ஏன்

பெண் : வந்தாள்
வஞ்சி இள மானே
கொண்டால் உன்னை
இங்கு தானே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக

ஆண் : வா வா
வஞ்சி இளம் மானே
வந்தால் என்னைத் தருவேனே

பெண் : வந்தாள்
வஞ்சி இளமானே
கொண்டால் உன்னை
இங்கு தானே

*****

3. ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
படம் : குரு சிஷ்யன் (1988)
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: இளையராஜா
பாடியவர்கள் : மனோ & கே.எஸ். சித்ரா

வீடியோ


ஆண் : ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
இங்க என்னடி உன் மனக்கணக்கு
சொல்லடி சொல்லடி எனக்கு
இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு
சந்தேகம் வரலாமா
காதல் கிளிக்கு
தேகம் சுடலாமா
சந்தேகம் வரலாமா
காதல் கிளிக்கு
தேகம் சுடலாமா
ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
இங்க என்னடி உன் மனக்கணக்கு
ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு

பெண் : அரும்பு மீசை
முகத்தில் வளர்ந்தால்
எங்களைக் கொஞ்சம்
சீண்டிப் பார்க்குது
சிறுகச் சிறுக
அருகில் நெருங்கி
கிறுகிறுக்கப் பாட்டும் பாடுது
அரும்பு மீசை
முகத்தில் வளர்ந்தால்
எங்களைக் கொஞ்சம்
சீண்டிப் பார்க்குது
சிறுகச் சிறுக
அருகில் நெருங்கி
கிறுகிறுக்கப் பாட்டும் பாடுது

ஆண் : ஏ கொஞ்சிக் கொஞ்சி
நான் கொண்டாடிடும்
என் வஞ்சிக் கொடி
நீ மிஞ்சாதடி
சிந்தாதடி இங்கு சில்லறைய
என் சிந்தாமணி
அது செல்லாதடி

பெண் : ஆண்களுக்குத்தான்
இங்கு என்ன இருக்கு
நல்ல பெண்ணைத் தவிர
இந்த உலகத்திலே

ஆண் : அதைச் சொல்லாத
செல்லக் கிளியே

பெண் : ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
அட என்ன இங்கு
உந்தன் கணக்கு
சொல்லிடு சொல்லிடு எனக்கு
இந்த சின்ன புத்தி
உனக்கெதுக்கு
என் வீர மகராஜா
அடடடடா ஊரச் சுத்தலாமா
என் வீர மகராஜா
அடடடடா ஊரச் சுத்தலாமா

ஆண் : துரத்தித் துரத்தி
விரட்டிப் பிடிக்கும்
பழக்கம் என்னைச்
சேர்ந்ததில்லையே
வளைத்துப் பிடித்து
இழுத்து அணைத்து
பெண்ணைக் கெடுக்கும்
எண்ணம் இல்லையே ஹோ
துரத்தித் துரத்தி
விரட்டிப் பிடிக்கும்
பழக்கம் என்னைச்
சேர்ந்ததில்லையே
வளைத்துப் பிடித்து
இழுத்து அணைத்து
பெண்ணைக் கெடுக்கும்
எண்ணம் இல்லையே

பெண் : ஊர்க்காவலா
நான் உன் காதலி
நீ ஊர் மேயவா
உந்தன் பின்னால் வந்தேன்
காதல் கிளி
எந்தன் காவல் உந்தன்
சிறு மோதல் என்றால்
இங்கு ரெண்டில் ஒன்று

ஆண் : பாமாவுக்கு நான் கண்ணனடி
நல்ல மாமி வீட்டு
மகராஜனடி
என்னை தீண்டாத
செல்லக் கிளியே

பெண் : ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
அட என்ன இங்கு
உந்தன் கணக்கு

ஆண் : அட சொல்லடி
சொல்லடி எனக்கு
இந்த சின்ன புத்தி
உனக்கெதுக்கு

பெண் : என் வீர மகராஜா
அடடடடா ஊரைச் சுத்தலாமா

ஆண் : சந்தேகம் வரலாமா
காதல் கிளிக்கு
தேகம் சுடலாமா

பெண் : ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
அட என்ன இங்கு
உந்தன் கணக்கு

ஆண் : அட ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு

*****