என் ராசாவின் மனசிலே

en rasavin manasile
நடிப்பு
ராஜ்கிரண், மீனா, கவுண்டமணி, செந்தில், வடிவேலு, ஸ்ரீவித்யா

பாடல்கள்
இளையராஜா, கவிஞர் பொன்னடியான், கவிஞர் உஷா, கவிஞர் பிறைசூடன்

இசை
இளையராஜா

ஒளிப்பதிவு
கிச்சாஸ்

படத்தொகுப்பு
எல். கேசவன்

கதை, இயக்கம்
கஸ்தூரி ராஜா

தயாரிப்பு
ராஜ்கிரண்

தயாரிப்பு நிறுவனம்
ரெட் சன் ஆர்ட் கிரியேசன்ஸ்

வெளீயீடு:
13 ஏப்ரல் 1991

வீடியோ


*****

பாடல்கள்
1. குயில் பாட்டு
படம் : என் ராசாவின் மனசிலே (1991)
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: பொன்னடியான்
பாடியவர் : சுவர்ணலதா

வீடியோ


குயில் பாட்டு ஓ
வந்ததென்ன இளமானே
அதை கேட்டு ஓ
செல்வதெங்கே மனம் தானே

இன்று வந்த
இன்பம் என்னவோ
அதை கண்டு கண்டு
அன்பு பொங்கவோ

குயிலே போ போ
இனி நான்தானே
இனி உன் ராகம்
அது என் ராகம்

குயில் பாட்டு ஓ
வந்ததென்ன இளமானே
அதை கேட்டு ஓ
செல்வதெங்கே மனம் தானே

அத்தை மகன் கொண்டாட
பித்து மனம் திண்டாட
அன்பை எண்ணி
நெஞ்சில் சுமப்பேன் ஓஹோ

புத்தம் புது செண்டாகி
மெத்தை சுகம் உண்டாக
அத்தனையும் அள்ளி கொடுப்பேன் ஓஹோ

மன்னவனும் போகும் பாதையில்
வாசமுள்ள மல்லிகைப்பூ
மெத்தை விரிப்பேன்
உத்தரவு போடும் நேரமே
முத்து நகை பெட்டகத்தை
முந்தி திறப்பேன்

மௌனம் போனதின்று
புது கீதம் பாடுதே
வாழும் ஆசையோடு
அது வாசல் தேடுதே
கீதம் பாடுதே
வாசல் தேடுதே

குயில் பாட்டு ஓ
வந்ததென்ன இளமானே
அதை கேட்டு ஓ
செல்வதெங்கே மனம்தானே

காலம் இங்கு கூண்டாக
வந்த இன்பம் வேம்பாக
இன்று வரை
எண்ணி இருந்தேன் ஓஹோ

பிள்ளை தந்த ராசாவின்
வெள்ளை மனம் பாராமல்
தள்ளி வைத்து
தள்ளி இருந்தேன் ஓஹோ

என் வயிற்றில்
ஆடும் தாமரை
கை அசைக்க
கால் அசைக்க
காத்து வளர்ப்பேன்
கற்பகத்து பொற்பதத்து பூவினை
அற்புதங்கள் செய்யும் என்று
சேர்த்து முடிப்பேன்

மௌனம் போனதின்று
புது கீதம் பாடுதே
வாழும் ஆசையோடு
கீதம் பாடுதே
வாசல் தேடுதே

குயில் பாட்டு ஓ
வந்ததென்ன இளமானே
அதை கேட்டு ஓ
செல்வதெங்கே மனம்தானே

இன்று வந்த இன்பம் என்னவோ
அதை கண்டு கண்டு
அன்பு பொங்கவோ

குயிலே போ போ
இனி நான்தானே
இனி உன் ராகம்
அது என் ராகம்

*****