|
|
கோபுர வாசலிலே ![]() நடிப்பு
கார்த்திக், பானுப்பிரியா, சுசித்ரா, நாசர், ஜனகராஜ், சார்லி, ஜீனியர் பாலையா, மோகன்லால்பாடல்கள்
கவிஞர் வாலி, பிறைசூடன்இசை
இளையராஜாஒளிப்பதிவு
பி. சி. ஸ்ரீராம்படத்தொகுப்பு
என். கோபாலகிருஷ்ணன்கதை
சீனிவாசன்வசனம்
கோகுலகிருஷ்ணாதிரைக்கதை, இயக்கம்
பிரியதர்ஷன்தயாரிப்பு
மு.க. தமிழரசு, எம். வேதாதயாரிப்பு நிறுவனம்
அருள் நிதி பிலிம்ஸ்வெளீயீடு:
22 மார்ச் 1991வீடியோ இத்திரைப்படத்தின் சில காட்சிகள் மலையாள மொழியில் 1990ம் வருடம் வெளிவந்த ‘பாவம் பாவம் ராஜகுமாரன்’ திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. மோகன்லால் ஒரு பாடல் காட்சியில் நடித்துள்ளார். மோகன்லால் தமிழில் நடித்த முதல் படம் இது. கோபுர வாசலிலே திரைப்படம் வெளியிடப்பட்டபோது நல்ல வரவேற்பை பெற்றதுடன், தமிழ் நாட்டில் உள்ள பல திரையரங்குகளில் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. ***** பாடல்கள்
1. காதல் கவிதைகள் படித்திடும் நேரம்
படம் : கோபுர வாசலிலே (1991) இசை : இளையராஜா பாடலாசிரியர்: கவிஞர் வாலி பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் & கே எஸ். சித்ரா வீடியோ ஐ லவ் திஸ் லவ்வபில் இடியட் ஆண்: காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம் இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம் இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும் அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட இருவர் : இதம் தரும் காதல் பெண்: கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம் இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம் இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும் அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட இருவர் : இதம் தரும் காதல் ஆண்: கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம் ஆண்: கை வீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல் இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ பெண்: பண் பாடிடும் சந்தம் உன் நாவினில் சிந்தும் அது மழையோ புனலோ நதியோ கலையழகோ ஆண்: மேகம் ஒன்று நேரில் இங்கு வாழ்த்த வந்ததடி தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக் கொண்டதடி பெண்: இது தொடரும் வளரும் மலரும் இனி கனவும் நினைவும் உனையே ஆண்: தொடர்ந்திடும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம் பெண்: இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம் ஆண்: இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும் பெண்: அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட ஆண்: இதம் தரும் காதல் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் பெண்: இதழோரம் இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் ஆண்: புது மோகம் பெண்: பூமாலைகள் கொஞ்சும் பாமாலைகள் கெஞ்சும் உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை ஆண்: தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தாள் அது புதுமை பெண்: கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபம் அல்லவோ காதலுக்கு காத்திருந்து காட்சி தந்ததோ ஆண்: இனி வருவாய் தருவாய் மலர்வாய் எனை உயிராய் உறவாய் தொடர்வாய் பெண்: தினம் தினம் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம் ஆண்: இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம் பெண்: இதயம் இடம் மாறும் ஆண்: ம்ம்ம் பெண்: இளமை பரிமாறும் ஆண்: அமுதும் வழிந்தோடும் பெண்: ம்ம்ம் ஆண்: அழகில் கலந்தாட பெண்: இதம் தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் ஆண்: இதழோரம் இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் பெண்: புது மோகம் *****
|