|
|
நாட்டுப்புறப் பாட்டு ![]() நடிப்பு
சிவக்குமார், செல்வா, குஷ்பு, மனோரமா, கவுண்டமணி, செந்தில், வினு சக்கரவர்த்தி, குமரி முத்து, பிரேம்குமார், அனுஷா, அபிராமி, சார்லி, ஜெய்கணேஷ், சண்முகசுந்தரம், இடிச்சபுளி செல்வராஜ், கருப்பு சுப்பையா, பெரிய கருப்பு தேவர், தேனி குஞ்சரம்மாஇசை
இளையராஜாஒளிப்பதிவு
கிச்சாஸ்படத்தொகுப்பு
எல். கேசவன்கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம்
கஸ்தூரி ராஜாதயாரிப்பு
விஜயலட்சுமி கஸ்தூரிராஜாதயாரிப்பு நிறுவனம்
கஸ்தூரி மங்கா கிரியேஷன்ஸ்வெளீயீடு:
9 பிப்ரவரி 1996வீடியோ ***** பாடல்கள்
1. ஒத்த ரூவாயும் தாரேன்
படம் : நாட்டுப்புறப் பாட்டு (1996) இசை : இளையராஜா பாடலாசிரியர்: கஸ்தூரி ராஜா பாடியவர்கள் : அருண்மொழி, தேவி நீத்தியார் வீடியோ ஆண் : ஒத்த ரூவாயும் தாரேன் ஒரு ஒனப்பத் தட்டும் தாரேன் நீ ஒத்துக்கிட்டு வாடி நாம ஓட பக்கம் போவோம் பெண் : ஒத்த ரூவாயும் வேணா உன் ஒனப்பத் தட்டும் வேணா ஒத்துக்கிற மாட்டேன் நீ ஒதுங்கி நில்லு மாமோய் ஆண் : ஏய் பத்து ரூவாயும் தாரேன் ஒரு பதிக்கஞ்சங்கிலி தாரேன் பச்சக் கிளி வாடி மெல்ல படப்பு பக்கம் போவோம் பெண் : ஏய் பத்து ரூவாயும் வேணா உன் பதிக்கஞ்சங்கிலி வேணா பசப்பி நிக்கிற மாமா என்ன உசுப்பி விட வேணா ஆண் : நா மச்சு வீடும் தாரேன் பஞ்சு மெத்த போட்டு தாரேன் மத்தியான நேரம் வாடி மாந்தோப்புக்கு போவோம் பெண் : அட மச்சு வீடும் வேணாம் உன் பஞ்சு மெத்தையும் வேணாம் மல்லுக்கு நிக்கிற மாமா உன் சொல்லுக்கு மயங்க மாட்டேன் ஆண் : ஹே நஞ்சை புஞ்சையும் தாரேன் நாலு தோட்டம் எழுதி தாரேன் தண்ணிக்கு போறது போல கண்ணே கொளத்து பக்கம் வாடி பெண் : உன் நஞ்சை புஞ்சையும் வேணாம் நாலு தோட்டம் தொறவும் வேணாம் கணக்கு பண்ணுற மாமா உன் கண்ணுக்கு சிக்க மாட்டேன் ஆண் : ஏய் சொத்து பூரா தாரேன் சாவிக் கொத்தும் கையில தாரேன் பத்தர மணிக்கு மேலே நீ வெத்தல காட்டுக்கு வாடி பெண் : ஓன் சொத்து சொகம் வேணா என் புத்தி கெட்ட மாமா மஞ்சத் தாலி போதும் ஓம் மடியில நான் வாரேன் *****
|