|
|
அருணாச்சலம் ![]() நடிப்பு
ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்பா, மனோரமா, வடிவுக்கரசி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், விசு, வி.கே. ராமசாமி, நிழல்கள் ரவி, கிட்டி, ஜனகராஜ், செந்தில், ராஜா, வினுசக்கரவர்த்தி, கிரேசி மோகன், பொன்னம்பலம், அல்வா வாசு, சுவாமினாதன், வெண்ணிற ஆடை நிர்மலா, சுந்தர் சிபாடல்கள்
வைரமுத்து, பழனி பாரதி, காளிதாசன்இசை
தேவாஒளிப்பதிவு
யூ.கே. செந்தில் குமார்படத்தொகுப்பு
பி. சாய் சுரேஷ்வசனம்
கிரேசி மோகன்திரைக்கதை, இயக்கம்
சுந்தர் சிதயாரிப்பு
கே.எஸ். நாகராஜன் ராஜா, கே. முரளிபிரசாத் ராவ்தயாரிப்பு நிறுவனம்
அண்ணாமலை சினி கம்பைன்ஸ்வெளீயீடு:
10 ஏப்ரல் 1997***** பாடல்கள்
1. சிங்கம் ஒன்று புறப்பட்டதே
படம் : அருணாச்சலம் (1997) இசை : தேவா பாடலாசிரியர்: வைரமுத்து பாடியவர் : மலேசியா வாசுதேவன் வீடியோ அதுக்கு நல்ல காலம் குழு : பொறந்துருக்கு ஆண் : நேரம் குழு : கனிஞ்சிருக்கு ஆண் : ஊரும் குழு : தெளிஞ்சிருக்கு ஆண் : உண்மை குழு : புரிஞ்சிருக்கு ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே ஆண் : உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு ஆண் : ரெண்டில் ஒன்று பார்க்கும் வரைக்கும் அட ரெண்டு கண்ணில் இல்லை உறக்கம் சபதம் செய்து ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல காலம் குழு : பொறந்துருக்கு ஆண் : நேரம் குழு : கனிஞ்சிருக்கு ஆண் : ஊரும் குழு : தெளிஞ்சிருக்கு ஆண் : உண்மை குழு : புரிஞ்சிருக்கு ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே ஹேய் ஆண் : பெத்தவர்கள் நினைத்ததை முடிப்பான் குழு : முடிப்பான் ஆண் : மற்றவர்கள் சுகத்துக்கு உழைப்பான் குழு : உழைப்பான் ஆண் : சத்தியத்தின் பாதை வழி நடப்பான் குழு : நடப்பான் ஆண் : மக்கள் பணம் மக்களுக்கே கொடுப்பான் குழு : கொடுப்பான் ஆண் : துன்பம் அது முடிகிறதே இவன் சொன்னால் இரவும் விடிகிறதே ஆஹா ஒரு வார்த்தையிலே அட ஆகாயம்தான் விடிகிறதே தீமை விலகிட நன்மை பெருகிட குழு : சட்டம் தீட்டும் திட்டம் கிட்டும் ஆண் : சிங்கம் ஒன்று குழு: ஹேய் ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல காலம் குழு : பொறந்துருக்கு ஆண் : நேரம் குழு : கனிஞ்சிருக்கு ஆண் : ஊரும் குழு : தெளிஞ்சிருக்கு ஆண் : உண்மை குழு : புரிஞ்சிருக்கு ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே ஹேய் ஆண் : பார்ப்பதற்கு பாமரன் போல் இருப்பான் குழு : இருப்பான் ஆண் : வேளை வந்தால் விஸ்வரூபம் எடுப்பான் குழு : எடுப்பான் ஆண் : கெட்டவங்க முகமூடி கிழிப்பான் குழு : கிழிப்பான் ஆண் : நல்லவங்க சொல்லும் சொல்லை மதிப்பான் குழு : மதிப்பான் ஆண் : பகையே நீ துள்ளாதே இவன் போகும் வழியில் நில்லாதே சீறும் சிங்கம் இவனல்லோ இவனை புழுவாய் நீ எண்ணாதே தீமை விலகிட நன்மை பெருகிட குழு : சட்டம் தீட்டும் திட்டம் கிட்டும் ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல காலம் குழு : பொறந்துருக்கு ஆண் : நேரம் குழு : கனிஞ்சிருக்கு ஆண் : ஊரும் குழு : தெளிஞ்சிருக்கு ஆண் : உண்மை குழு : புரிஞ்சிருக்கு ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு ரெண்டில் ஒன்று பார்க்கும் வரைக்கும் அட ரெண்டு கண்ணில் இல்லை உறக்கம் சபதம் செய்து சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல காலம் குழு : பொறந்துருக்கு ஆண் : நேரம் குழு : கனிஞ்சிருக்கு ஆண் : ஊரும் குழு : தெளிஞ்சிருக்கு ஆண் : உண்மை குழு : புரிஞ்சிருக்கு ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே ஹேய் ஹா ஹா *****
2. அதாண்டா இதாண்டா
படம் : அருணாச்சலம் (1997) இசை : தேவா பாடலாசிரியர்: வைரமுத்து பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் வீடியோ ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ ஆண் : அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான் தான்டா ஹே அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான் தான்டா ஆண் : அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான் தான்டா அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா ஆண் : ஆண்டவன் நடத்திடுவாண்டா குழு: ஹோய் ஹோய் ஹோய் ஆண் : அருணாச்சலம் நடத்திடுவாண்டா குழு: ஹோய் ஹோய் ஹோய் ஆண் : நான் உப்பு போட்ட ஆள மறப்பதில்லடா ஆனா தப்பு செஞ்ச ஆள விடுவதில்லடா ஆஆஆ ஆண் : அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான் தான்டா அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : என் கண் இரடண்டையும் காப்பாத்தும் கண்ணிமையும் நீதான் என் தோள்களிலே முழு பலமாய் உள்ளவனும் நீதான் என் நெஞ்சில் வாழ்ந்து வரும் தைரியமும் நீதான் என் சொல்லில் குடியிருக்கும் சத்தியமும் நீதான் குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : ஆ இன்னுயிராய் வந்தவனே என்னுயிரும் நீதான் என் இருதயத்தில் துடித்துடிப்பாய் இருப்பவனும் நீதான் எண்ணம் போல் வெற்றி பெற உழைப்பவனும் நீதான் என் இறுதி வரை கூட வரும் கூட்டணியும் நீதான் குழு : ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ ஆண் : இளமையில் உழைப்பவன் முதுமையில் சிரிக்கிறான் இளமையில் படுத்தவன் முதுமையில் தவிக்கிறான் உனது ரத்தமும் எனது ரத்தமும் உறவு ரத்தமடா நீயும் நானும் நானும் நீயும் நிறத்தால் குணத்தால் ஒன்னடா ஹாஹா ஆண் : அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான் தான்டா அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா குழு : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : தாயென்ற ஒரு தெய்வம் வீட்டோட இருக்கு நீ தனித்தனியா கோவில் குளம் அலைவது எதுக்கு அம்மாவின் பாதத்தில் கற்பூரம் கொளுத்து ஆனந்த கண்ணீரில் அபிஷேகம் நடத்து குழு : ஓ ஹோ ஓ ஹோ ஆண் : காட்டு விலங்கெல்லாம் கொழுத்தாதான் மதிப்பு அட காவி துறவியெல்லாம் மெலிஞ்சாத்தான் மதிப்பு பணம் கொஞ்சம் இருந்தாலும் கொடுத்தா தான் மதிப்பு நீ மகனென்றால் உன் தாயை மதிச்சாதான் மதிப்பு குழு : ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ ஆண் : தனக்கென வாழ்பவன் இருக்கையில் இறக்கிறான் பிறர்கென வாழ்ந்தவன் இறந்துமே இருக்கிறான் உன்னை விடவும் எனக்கு வேறு உறவு இல்லையடா என்னை என்றும் வாழ வைக்கும் தெய்வம் தெய்வம் நீயடா ஹா ஆண் : அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான் தான்டா அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான் தான்டா அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா ஆண் : ஆண்டவன் நடத்திடுவாண்டா குழு: ஹோய் ஹோய் ஹோய் ஆண் : அருணாச்சலம் நடத்திடுவாண்டா குழு: ஹோய் ஹோய் ஹோய் ஆண்: நான் உப்பு போட்ட ஆள மறப்பதில்லடா ஆனா தப்பு செஞ்ச ஆள விடுவதில்லடா ஆண் : அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான் தான்டா அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான் தான்டா அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா ***** 3. மாத்தாடு மாத்தாடு மல்லிகே
படம் : அருணாச்சலம் (1997) இசை : தேவா பாடலாசிரியர்: பழனி பாரதி பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ரா வீடியோ மாத்தாடு மாத்தாடு மல்லிகே ஆண் : கிளி கிளி கிளி பச்ச பசுங்கிளி வழி வழி வழி விட்டு விலகடி இடுப்பு மடிப்பில் ஆள மடிக்கும் ஹே வேதவள்ளி ஆண் : மாத்தாடு மாத்தாடு மல்லிகே மாத்தாடு மாத்தாடு மல்லிகே அம்பிகே ராதிகே தேவிகே மேனகே ஆண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே மாத்தாடு மாத்தாடு மல்லிகே பெண் : பல பல பல ரெண்டு தினம் பல நிறம் நிறம் நிறம் நீல கண்ணின் நிறம் பொம்பள மனசு சிரிச்சு பறிக்கும் ஹே அருணாச்சலம் பெண் : மாத்தாடு மாத்தாடு மல்லிகே மாத்தாடு மாத்தாடு மல்லிகே சின்னய்யா கண்ணையா செல்லய்யா சொல்லையா பெண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே மாத்தாடு மாத்தாடு மல்லிகே பெண் : அப்பாவி ஆனாலும் அடிமேல அடிவாங்கும் அடிச்சாலும் ஊர் கூடி ஆஹான்னு சொல்லுது என்னது பெண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே மாத்தாடு மாத்தாடு மல்லிகே ஆண் : அடி மேல அடி வாங்கி அனைவரையும் சொக்க வைக்கும் மேளக்காரன் கொண்டு வந்த மிருதங்கம் தான் நீ சொன்னது ஆண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே ஹய்ய ா மாத்தாடு மாத்தாடு மல்லிகே ஆண் : ஒல்லி ஒல்லி சுப்பன் தான் ஒத்தக்காலு கருப்பன் தான் ஒரு காலு இருந்தாலும் ஊனறது மேடையில்தான் யாரது ஆண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே மாத்தாடு மாத்தாடு மல்லிகே பெண் : ஒல்லி ஒல்லி சுப்பையா ஒத்தக்காலு கருப்பையா நீ சொன்ன ஜாடையெல்லாம் ஊது பத்திதான் அது சொன்னது பெண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே மாத்தாடு மாத்தாடு மல்லிகே பெண் : தாளமில்லா ஆட்டம் அது தப்பான ஆட்டமது பொம்பளைக்கு புடிக்காத ஆட்டம் அது என்னது என்னது பெண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே மாத்தாடு மாத்தாடு மல்லிகே ஆண் : சுத்தி சுத்தி ஆடுறது துட்டு கட்டி ஆடுறது பொம்பளைக்கு புடிக்காத சூதாட்டம் தான் அது சொன்னது ஆண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே மாத்தாடு மாத்தாடு மல்லிகே ஆண் : ஹோய் மூணு கிளி மூணு நிறம் மூணுக்குமே வேற குணம் கூண்டுக்குள்ளே போட்டதுமே அத்தனையும் சிவப்பு நிறம் என்னது ஆண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே மாத்தாடு மாத்தாடு மல்லிகே பெண் : வெத்தலையும் சுண்ணாம்பும் வெட்டிவச்சா கருப்பாகும் ஒன்னாக சேரும்போது சிவக்கிற தாம்புலம்தான் அது பெண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே மாத்தாடு மாத்தாடு மல்லிகே பெண் & ஆண் குழு : ஏலேலே ஐய ஏலேலேலோ மா ஏலேலே ஐய ஏலேலேலோ மா பெண் : ஒருத்தனுக்கு கைக்கொடுத்தா ஒருத்தனுக்கு கால்கொடுத்தா ஒருத்தன தான் மாரோட கட்டிக்கிட்டா பொம்பள யாரது பெண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே மாத்தாடு மாத்தாடு மல்லிகே ஆண் : வளையலுக்கு கைக்கொடுத்தா கொலுசுக்குத்தான் கால் கொடுத்தா முந்தானை சேலையைத்தான் மாரோட கட்டிக்கிட்டா பொம்பளை ஆண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே ஆண் : லே லே லே லே அம்மா ஆண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே ஆண் : ஹை ஒருத்தனத்தான்கழட்டி புட்டா ஒருத்தனத்தான் கட்டிப்புட்டா ஒருத்தனத்தான் கையோட வச்சிக்கிட்டா பொம்பள யாரது ஆண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே மாத்தாடு மாத்தாடு மல்லிகே ஆண் : இளங்கன்ன கழட்டிப்புட்டு பசுமாட்ட கட்டி புட்டு கையோட வெச்சிருந்தா பால் சொம்புதான் அது வேறெது ஆண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே மாத்தாடு மாத்தாடு மல்லிகே பலம் பலம் பலம் ரெண்டு பீமன் பலம் நிறம் நிறம் நிறம் நீலக்கண்ணின் நிறம் அவனை ஜெயிக்க யாரும் இல்ல அவன் தான்டி அருணாச்சலம் ஆண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே மாத்தாடு மாத்தாடு மல்லிகே மாத்தாடு மாத்தாடு மல்லிகே மாத்தாடு மாத்தாடு மல்லிகே ***** 4. அல்லி அல்லி அனார்க்கலி
படம் : அருணாச்சலம் (1997) இசை : தேவா பாடலாசிரியர்: பழனி பாரதி பாடியவர்கள் : மனோ & சுவர்ணலதா வீடியோ தூத்தியா தூத்தூவாரே தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே ஆண் : அல்லி அல்லி அனார்க்கலி லவ்லி லவ்லி ரோஜக்கிளி ஆல் ரவுண்டர் நான்தான் கிளி பாத்துக்கோ என்ன பாத்துக்கோ குழு : தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே பெண் : அல்லி அல்லி அனார்க்கலி லவ்லி லவ்லி ரோஜக்கிளி அள்ளித் தருவாள் உந்தன் கிளி சேர்த்துக்கோ என்னை ஏத்துக்கோ குழு : தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே குழு : ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஆஹா ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய்யா யாய்யாய் ஹாய்யா யாய்யாய் குழு : ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஆஹா ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய்யா யாய்யாய் ஹாய்யா யாய்யாய் ஆண் : நான் குளிக்க நீ எதுக்கு நெனஞ்ச என் மனசுக்குள் எப்படி நீ நுழைஞ்சே ஹேய் பெண் : ஒரு பட்டாம்பூச்சி போல வந்து திரிஞ்ச நான் தொட்டதுமே பூவுக்குள்ளே நொழைஞ்ச குழு : தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே ஆண் : வெள்ளரிக்க இடுப்ப நீ துள்ளி துள்ளி வளைச்சே புல்லரிக்க வச்சு என்ன மெல்ல மெல்ல பறிச்ச பெண் : மன்மதனும் கத்துகிட்டான் உன்னுடைய ஸ்டைலு ஆனாலும் இது போல எம் மனசு படல குழு : தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே ஆண் : அல்லி அல்லி அனார்க்கலி லவ்லி லவ்லி ரோஜக்கிளி ஆல் ரவுண்டர் நான்தான் கிளி பாத்துக்கோ என்ன பாத்துக்கோ குழு : தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே பெண் : மேகம் போல உந்தன் நிறம் கருப்பு ஆனா சூரியனை கொண்டு வரும் உன் சிரிப்பு ஹேய் ஆண் : அடி பொம்பளையில் உனக்கொரு சிறப்பு நீ எலும்பே இல்லாத படைப்பு ஹஹா குழு : தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே பெண் : என்ன விட்டு அடிக்கடி வடக்கே நீ போறே இஷ்டப்பட்டா மட்டும்தானே ஊருக்குள்ளே வாரே ஆண் : ஹாய்… உன்னை போல பொம்பளைங்க தொந்தரவுனாலே காவி கட்டி போறது ரொம்ப நல்ல வேலை குழு : தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே ஆண் : ஹேய் அல்லி அல்லி அனார்க்கலி லவ்லி லவ்லி ரோஜக்கிளி ஆல் ரவுண்டர் நான்தான் கிளி பாத்துக்கோ என்ன பாத்துக்கோ குழு : தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே பெண் : அல்லி அல்லி அனார்க்கலி லவ்லி லவ்லி ரோஜக்கிளி அள்ளித் தருவாள் உந்தன் கிளி சேர்த்துக்கோ என்னை ஏத்துக்கோ குழு : தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே பெண் : ஹே ஹே குழு : தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே ஆண் : ஹே ஹே குழு : தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே ***** 5. நகுமோ
படம் : அருணாச்சலம் (1997) இசை : தேவா பாடலாசிரியர்: வைரமுத்து பாடியவர்கள் : ஹரிஹரன் & கே.எஸ். சித்ரா வீடியோ வெட்கம் விடுமோ முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி ஆண் : நகுமோ ஹே சுகமோ வெட்கம் தகுமோ முத்தம் போடும் போது ஆடும் இளங்கொடி பெண் : நகுமோ ஹே சுகமோ வெட்கம் விடுமோ முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி நகுமோ ஓஓஓ பெண் : வெள்ளி கொலுசு இது ஓசை ஓசை இட வெள்ளிக் கிழமையில் ஆசை ஆசை வர முத்தம் தருகையில் மீசை மீசை வந்து மோகம் தூண்டி விடுதே ஆண் : உச்சந்தலையில என்னை எண்ணிக் கொண்டு உள்ளங்கால் வரை பின்னி பின்னிக் கொண்டு முத்தம் தருகையில் மோகமான கிளி உதட்ட கடிச்சு விட்டதே பெண் : நெசமா ஆண் : நெசந்தான் பெண் : காயமா ஆண் : பாருமா பெண் : ரி ரி க ஆண் : ப ப க பெண் : ரி ரி க ஆண் : ப ப க ஆண் & பெண் : க ரி ச நி ச நி ச நி தா ப த ச ரி பெண் : நகுமோ ஆண் : ஹே சுகமோ பெண் : வெட்கம் விடுமோ ஆண் : முத்தம் போடும் போது ஆடும் இளங்கொடி பெண் : நகுமோ ஓஓஓ பெண் : அல்லி மலர்வது இரவு நேரத்துல மல்லி மலர்வது மாலை நேரத்துல பெண்மை மலர்வது எந்த நேரத்துல எங்க கண்டு பிடிச்ச ஆண் : கட்டை விரல் கொண்டு கோலம் போடுகையில் கண்ணின் கடைவிழி சாய்ந்து மூடுகையில் காலின் கொலுசுகள் தாளம் ஆடுகையில் பெண்மை மலர்ந்து நிற்குமே ஆண் : சரியா பெண் : சரிதான் ஆண் : பரிசு பெண் : இதுதான் ஆண் : ரி ரி க பெண் : ப ப க ஆண் : ரி ரி க பெண் : ப ப க ஆண் & பெண் : க ரி ச நி ச நி ச நி தா ப த ச ரி பெண் : நகுமோ ஹே சுகமோ வெட்கம் விடுமோ முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி ஆண் : நகுமோ ஹே சுகமோ வெட்கம் தகுமோ முத்தம் போடும் போது ஆடும் இளங்கொடி பெண் : நகுமோ ஓஓஓ ***** 6. தலைமகனே கலங்காதே
படம் : அருணாச்சலம் (1997) இசை : தேவா பாடலாசிரியர்: காளிதாசன் பாடியவர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் வீடியோ தனிமை கண்டு மயங்காதே ஆண் : தலைமகனே கலங்காதே தனிமை கண்டு மயங்காதே உன் தந்தை தெய்வம்தானடா உன் தந்தை தெய்வம்தானடா ஆண் : தலைமகனே கலங்காதே தனிமை கண்டு மயங்காதே ஆண் : ஹே மேகங்கள் அதுபோல சோகங்கள் கலைந்தோடும் ஆஹா நீ போகும் பாதையெல்லாம் நியாயங்கள் சபையேறும் ஆண் : எந்நாளும் உன்னோடு உன் அன்னை மனம் வாழும் தெய்வங்கள் அருளோடு திசையாவும் மலர் தூவும் ஆண் : தலைமகனே கலங்காதே தனிமை கண்டு மயங்காதே தலைமகனே கலங்காதே தனிமை கண்டு மயங்காதே ஏஏஏ ***** |