மறுமலர்ச்சி

marumalarchi
நடிப்பு
மம்முட்டி, தேவயானி, ரஞ்சித், மன்சூர் அலி கான், கலாபவன் மணி, மனோரமா, ஆர். சுந்தர்ராஜன், மேஜர் சுந்தர்ராஜன், ஜோதி லட்சுமி, விவேக், பாண்டு, வாசு விக்ரம், பாலா சிங், வையாபுரி, எம்.என். ராஜம், எஸ்.என். லட்சுமி, ஷகிலா, சண்முகசுந்தரம், அப்புக்குட்டி

பாடல்கள்
வாலி, வி. சி. விஜய்சங்கர்

இசை
எஸ்.ஏ. ராஜ்குமார்

ஒளிப்பதிவு
தங்கர் பச்சான்

படத்தொகுப்பு
வி. டி. விஜயன், பி. லெனின்

கதை, இயக்கம்
மறுமலர்ச்சி பாரதி

தயாரிப்பு
ஹென்றி

தயாரிப்பு நிறுவனம்
பங்கஜ் புரொடக்‌ஷன்ஸ்

வெளீயீடு:
14 ஜனவரி 1998

வீடியோ


*****

பாடல்கள்
1. நன்றி சொல்ல உனக்கு
படம் : மறுமலர்ச்சி (1998)
இசை : எஸ்.ஏ. ராஜ்குமார்
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : பி. உன்னிகிருஷ்ணன் & கே.எஸ். சித்ரா

வீடியோ


பெண் : நன்றி சொல்ல உனக்கு
வாா்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
காலமுள்ள வரைக்கும்
காலடியில் கிடக்க
நான்தான் விரும்புறேன்

பெண் : நெடுங்காலம் நான் புாிஞ்ச
தவத்தாலே நீ கிடைச்ச
பசும்பொன்னை பித்தளையா
தவறாக நான் நினைச்சேன்
நோில் வந்த ஆண்டவனே

ஆண் : ஊரறிய உனக்கு
மாலையிட்ட பிறகு
ஏன்மா சஞ்சலம்
உன்னுடைய மனசும்
என்னுடைய மனசும்
ஒன்றாய் சங்கமம்

பெண் : செவ்விளனி நான் குடிக்க
சீவியதை நீ கொடுக்க
சிந்தியது ரத்தமல்ல
எந்தன் உயிா்தான்

ஆண் : கள்ளிருக்கும் தாமரையே
கையணைக்கும் வான்பிறையே
உள்ளிருக்கும் நாடியெங்கும்
உந்தன் உயிா்தான்

பெண் : இனிவரும் எந்தப் பிறவியிலும்
உனைச் சேர காத்திருப்பேன்

ஆண் : விழி மூடும் இமை போல
விலகாமல் வாழ்ந்திருப்பேன்

பெண் : உன்னப் போல தெய்வமில்ல உள்ளம் போல கோவில் இல்ல
தினந்தோறும் அா்ச்சனைதான்
எனக்கு வேற வேலை இல்ல

பெண் : நன்றி சொல்ல உனக்கு
வாா்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்

ஆண் : உன்னுடைய மனசும்
என்னுடைய மனசும்
ஒன்றாய் சங்கமம்

ஆண் : வங்கக் கடல் ஆழமென்ன
வல்லவா்கள் கண்டதுண்டு
அன்புக்கடல் ஆழம் யாரும்
கண்டதில்லையே

பெண் : என்னுடைய நாயகனே
ஊா் வணங்கும் நல்லவனே
உன்னுடைய அன்புக்கு அந்த
வானம் எல்லையே

ஆண் : எனக்கென வந்த தேவதையே
சாிபாதி நீயல்லவா

பெண் : நடக்கையில்
உந்தன் கூட வரும்
நிழல் போலே நானல்லவா

ஆண் : கண்ணன் கொண்ட ராதையென
ராமன் கொண்ட சீதையென
மடி சோ்ந்த பூரதமே
மனதில் வீசும் மாருதமே

பெண் : நன்றி சொல்ல உனக்கு
வாா்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்

ஆண் : என்னுடைய மனச
தந்துவிட்ட பிறகும்
ஏன்மா கலங்குற

பெண் : நெடுங்காலம் நான் புாிஞ்ச
தவத்தாலே நீ கிடைச்ச

ஆண் : திருக்கோயில் வீடு என்று
விளக்கேத்த நீயும் வந்த

பெண் : நோில் வந்த ஆண்டவனே

*****