|
|
மின்னலே ![]() நடிப்பு
மாதவன், அப்பாஸ், ரீமா சென், விவேக், நாகேஷ், கிட்டி, பாத்திமா பாபுபாடல்கள்
வாலி, தாமரைஇசை
ஹாரிஸ் ஜெயராஜ்ஒளிப்பதிவு
ஆர்.டி.ராஜசேகர், ரவி வர்மன்படத்தொகுப்பு
சுரேஷ் அர்ஸ்இயக்கம்
கௌதம் மேனன்தயாரிப்பு
டாக்டர் முரளி மனோகர்தயாரிப்பு நிறுவனம்
சி ஐ டிவி எண்டர்டெயிண்மெண்ட்வெளீயீடு: 18 பிப்ரவரி 2001இத்திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் அறிமுகமானார். இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை அமைத்தவர் ஹாரிஸ் ஜயராஜ் ஆவார். பாடல் வரிகளை வாலி மற்றும் தாமரை ஆகியோர் எழுதியுள்ளனர். தாமரை எழுதிய ‘வசீகரா’ பாடல், தமிழ் திரைப்படத்தில் முதன் முதலாக பெண் ஒருத்தியின் காதல் உணர்வு, பெண் பார்வையில் எழுதப்பட்ட பாடலாக பதிவாகி இருக்கிறது. வீடியோ *****
பாடல்கள்
1. வசீகரா என் நெஞ்சினிக்க
படம் : மின்னலே (2001) பாடியவர் : பாம்பே ஜெயஸ்ரீ இசை : ஹாரிஸ் ஜெயராஜ் இயற்றியவர் : தாமரை வீடியோ என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும் அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும் வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும் அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும் நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே நான் அடை மழை வரும் அதில் நனைவோமே குளிர் காய்ச்சலோடு சினேகம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம் குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய் அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையேதான் எதிர்பார்க்கும் எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும் சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குளே நான் வேண்டும் வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும் அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும் தீரும் தீரும் தினம் நீ குளித்ததும் என்னைத் தேடி என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை திருடன் போல் பதுங்கியே திடீர் என்று பின்னாலிருந்து என்னை நீ அணைப்பாயே அது கவிதை யாரேனும் மணி கேட்டால் அதை சொல்ல கூட தெரியாதே காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும் அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும் நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே நான் *****
2. அழகிய தீயே
படம் : மின்னலே (2001) பாடியவர் : பாம்பே ஜெயஸ்ரீ இசை : ஹாரிஸ் ஜெயராஜ் இயற்றியவர் : தாமரை வீடியோ என்னை வாட்டுகிறாயே ஒரு ஹைக்கு கவிதை விழிகளில் நீ பாடப் பாட ஒரு ஹப்பர் டென்ஷன் தலைக்கேறுதே நானும் வாட ஆண்: ஏ அழகிய தீயே என்னை வாட்டுகிறாயே ஒரு ஹைக்கு கவிதை விழிகளில் நீ பாடப் பாட ஒரு ஹப்பர் டென்ஷன் தலைக்கேறுதே நானும் வாட ஆண்கள்(குழு): பாவைகள் உனக்கொரு அலர்ஜியடா அவளைப் பார்த்ததும் உனக்குள்ளே எனர்ஜியடா ஆண்: என்னை ஏதோ செய்து விட்டாள் ஆண்கள்(குழு): கமான் பேபி டோண்ட் டூ திஸ் பேபி ஆண்: நெஞ்சை பூபோல் கொய்து விட்டாள் நெஞ்சை பூபோல் கொய்து விட்டாள் ஆண்கள்(குழு): டோண்ட் யூ எவர் டூ திஸ் டோண்ட் யூ எவர் டூ திஸ் டோண்ட் யூ எவர் டூ திஸ் ஆண்கள்(குழு): டோண்ட் யூ எவர் டூ திஸ் டோண்ட் யூ எவர் டூ திஸ் டோண்ட் யூ எவர் டூ திஸ் பெண்: ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஆண்: அறவே இல்லை உறக்கம் அதற்கும் இல்லை இரக்கம் இமைகள் ஒன்றாக எப்போதும் சேராமல் இடையில் நின்றாயே இது நியாயமா ஆண்கள்(குழு): பி.பி. ஏறி போச்சு இளரத்தம் நெஞ்சில் கார்கில் போலே ஒரு யுத்தம் அடி அர்த்த ராத்திரி சம்மர் மாதிரி வெப்பம் தாக்குதடி கண்ணில் எதிர் நின்று தாக்கவே தீயும் காற்றும் ஒன்று சேர்ந்ததோ உன்னில் ஆண்: நீ என்னை சுட்டதும், அனலில் இட்டதும் எந்த மட்டிலும் போ-போ-போதும் ஆண்: ஏ அழகிய தீயே என்னை வாட்டுகிறாயே ஒரு ஹைக்கு கவிதை விழிகளில் நீதான் பாடப் பாட ஒரு ஹப்பர் டென்ஷன் தலைக்கேறுதே நானும் வாட ஆண்கள்(குழு): நெவர் டூ திஸ் டு மீ டோண்ட் எவர் டூ திஸ் டு மீ பேபி ஏ ஆண்கள்(குழு): உன் பெயர் சொல்லிச் சொல்லி என்னையே நான் மறந்தேன் உன் மின்னல் பார்வையில் என்னுயிர் நான் தொலைத்தேன் உன் பெயர் சொல்லிச் சொல்லி என்னையே நான் மறந்தேன் உன் மின்னல் பார்வையில் என்னுயிர் நான் தொலைத்தேன் ஆண்: உதட்டில் உந்தன் பெயர்தான் உடலில் உந்தன் உயிர்தான் நிலத்தில் நின்றாலும் நீ எங்கு சென்றாலும் நான் உன்னை தொடர்கின்ற நிழல் அல்லவா ஆண்கள்(குழு): காதல் பித்து ஏறி மனம் கத்த அவளை செக்கு போல நீ சுத்த உன்னை கொஞ்சம் கொஞ்சமாய் துண்டம் துண்டமாய் கொன்று போட்டது என்ன கொடி மின்னல் காட்டிய தேகம் யாவும் மின்னல் போலவே மின்ன ஆண்: நான் என்னை என்னிடம் இல்லை என்றுதான் பெண்ணே உன் இடம் வந்தேன் தேட பெண்: ஓஓஓ ஓஓஓ ஆண்: ஏ அழகிய தீயே என்னை வாட்டுகிறாயே ஒரு ஹைக்கு கவிதை விழிகளில் நீதான் பாடப் பாட ஒரு ஹப்பர் டென்ஷன் தலைக்கேறுதே நானும் வாட ஆண்கள்(குழு): பாவைகள் உன்னகொரு அலர்ஜியட அவளை பார்த்ததும் உன்னகுள்ளே எனர்ஜியட ஆண்: என்னை ஏதோ செய்து விட்டாள் ஆண்கள்(குழு): கமான் பேபி டோண்ட் டூ திஸ் பேபி ஆண்: நெஞ்சை பூபோல் கொய்து விட்டாள் நெஞ்சை பூபோல் கொய்து விட்டாள் *****
|