|
|
மாயாண்டி குடும்பத்தார் ![]() நடிப்பு
மணிவண்ணன், பொன்வண்ணன், சீமான், கே.பி. ஜெகந்நாத், தருண் கோபி, ஜி.எம். குமார், ரவி மரியா, நந்து பெரியசாமி, சிங்கம்புலி, ராஜ் கபூர்ஒளிப்பதிவு
பாலாபரணிபடத்தொகுப்பு
சுரேஷ் அர்ஸ்பாடல்கள்
கவிஞர் தமிழ்அமுதன், நா.முத்துக்குமார், நந்தலாலா, சீமான்இசை
சபேஷ் - முரளிகதை, இயக்கம்
ராசு மதுரவன்தயாரிப்பாளர்
எஸ். கே. செல்வகுமார்தயாரிப்பு நிறுவனம்
யுனைடட் ஆர்ட்ஸ்வெளீயீடு:
5 ஜூன் 2009வீடியோ ***** பாடல்கள்
1. முதல் மழையே
படம் : மாயாண்டி குடும்பத்தார் (2009) பாடியவர்கள் : பல்ராம், சைந்தவி இசை : சபேஷ் - முரளி பாடலாசிரியர் : நா.முத்துக்குமார் வீடியோ முதல் மழையே முதன் முதலாய் என்னை நனைக்கிறியே பெண்: முதல் விதையே முதல் விதையே முதன் முதலாய் நெஞ்சில் முளைக்கிறியே ஆண்: என்னை மறந்தேனே நானே உந்தன் வசமாகிப் போனேன் பெண்: உன்னை நினைத்தேனே நானே என்னை மறந்தே தான் போனேன் ஆண்: என் பாதி நீ உன் பாதி நான் பெண்: என் பாதை நீ உன் பாதம் நான் ஆண்: முதல் மழையே முதல் மழையே முதன் முதலாய் என்னை நனைக்கிறியே ஆண்: இருவரின் பார்வைகள் உரசிடும் நேரம் இதயத்தில் மழையுடன் மின்னல்கள் தோன்றும் பெண்: இடைவெளி கொஞ்சமாய் குறைந்திடும் நேரம் சுவாசத்தில் செல்லமாய் வெப்பங்கள் கூடும் ஆண்: யாரோடும் பேசவில்லையே எங்கேயும் போகவில்லையே என்னாச்சு பெண்ணே எனக்கு பெண்: பசி தாகம் தோன்றவில்லையே படித்தாலும் நினைவில் இல்லையே புடிச்சாச்சு காதல் கிறுக்கு ஆண்: உன் காதோரம் கம்மலா நான் பிறந்திடவா உன் கன்னத்த உரசித்தான் கிடந்திடவா பெண்: முதல் விதையே முதல் விதையே முதன் முதலாய் நெஞ்சில் முளைக்கிறியே பெண்: இருவரின் வேர்வைகள் இணைத்திடும் நேரம் இதுவரை வாழ்ந்ததே இதற்கென தோன்றும் ஆண்: இருவரின் வாசங்கள் கலந்திடும் நேரம் உயிரிலே புது புது கலவரம் தோன்றும் பெண்: சில்லென்று தென்றல் வீசுதே சட்டென்று தீயும் வீசுதே இது தானா காதல் மயக்கம் ஆண்: சொல்லாமல் உதடு பேசுதே நில்லாமல் கண்கள் தேடுதே வந்தாச்சு காதல் எனக்கும் பெண்: அட இது என்ன இது என்ன புது சுகமோ உன் சொந்தம் போல் வேறேதும் உடன் வருமோ ஆண்: முதல் மழையே முதல் மழையே முதன் முதலாய் என்னை நனைக்கிறியே பெண்: என்னை மறந்தேனே நானே உந்தன் வசமாகி போனேன் ஆண்: உன்னை நினைத்தேனே நானே என்னை மறந்தே தான் போனேன் பெண்: என் பாதி நீ உன் பாதி நான் ஆண்: என் பாதை நீ உன் பாதம் நான் பெண்: என் பாதி நீ உன் பாதி நான் ஆண்: என் பாதை நீ உன் பாதம் நான் ***** |