|
|
புறம்போக்கு என்கிற பொதுவுடமை ![]() நடிப்பு
ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நாயர்ஒளிப்பதிவு
என்.கே.ஏகாம்பரம்படத்தொகுப்பு
என்.கணேஷ் குமார்இசை
வர்ஷன்பிண்ணனி இசை
ஸ்ரீகாந்த் தேவாகதை, வசனம், இயக்கம்
எஸ்.பி.ஜனநாதன்தயாரிப்பு
பைனரி பிக்சர்ஸ்வெளியீடு
யூடிவி மோஷன் பிக்சர்ஸ்வெளிவந்த நாள்
15 மே 2015ஆர்யா, ஷாம், விஜய் சேதுபதி ஆகிய மூன்று கதாநாயகர்கள் இணைந்து நடித்த படம். ஆர்யா, மரண தண்டனை கைதி. ஷாம், ஆர்யாவை தூக்கில் போடுவதற்காக நியமிக்கப்பட்ட விசேஷ ஜெயில் அதிகாரி. விஜய் சேதுபதி, ஆர்யாவை தூக்கில் போடுகிற தொழிலாளி. தீவிர கம்யூனிசவாதியாக ஆர்யா. தாடி-மீசையுடன் கூடிய ஒப்பனை இல்லாத முகம். ஜெயில் உடை. மரணத்தின் விளிம்பில் கூட, கம்யூனிச தத்துவங்களை பேசுகிற துணிச்சலான தூக்கு தண்டனை கைதி. கதாபாத்திரத்தை உள்வாங்கி ஒரு போராளியாகவே மாறியிருக்கிறார். வாய் பிளந்து கண்கள் வெறித்திருக்கும் அந்த கடைசி காட்சியில் பார்வையாளர்களை அதிர்ச்சியில் விளிம்புக்கே கொண்டு சென்றுள்ளார். ‘மெக்காலே’ என்ற ஜெயில் அதிகாரியாக வரும் ஷாம், ஒவ்வொரு அசைவிலும், பார்வையிலும், வசன உச்சரிப்பிலும் போலீஸ் வாசனை. நேர்மையும், கண்டிப்பும் மிகுந்த ஒரு இளம் ஜெயில் அதிகாரியை கண் முன் நிறுத்துகிறார். அவருடைய திடமான உடற்கட்டு அதற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் ஒரு மனிதாபிமான அதிகாரியாக ஷாம் எங்கேயும் சட்டத்தின் கடமையை தவறுவதில்லை, கண்ணியத்தையும் மீறுவதில்லை. தூக்கில் போடுகிற வேலையை செய்யும் விஜய் சேதுபதியின் நடிப்பு விசேஷமான பாராட்டுக்கு உரியது. தண்டனையை நிறைவேற்றிவிட்டுச் சரிந்து உட்காரும் இடத்தில் அபாரமாக நடித்திருக்கிறார். தீவிரவாத கும்பலுக்கு தலைமை ஏற்பவராக கார்த்திகா. போராளியாக பைக்கில் வலம் வரும்போது தமிழ் கதாநாயகிகளுக்குரிய பிம்பத்தை தகர்த்தெறிகிறார். படத்தின் முதல்பாதி மெதுவாக நகர்ந்தாலும் இடைவேளைக்குப்பிறகு எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்படைகிறது. மொத்தத்தில் ஜனநாதன் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ நல்ல முற்போக்கு சிந்தனைகளையும் தரமான கருத்துக்களையும் சொல்லியிருக்கும் புரட்சிகரமான படம். |