|
|
மத கஜ ராஜா ![]() நடிப்பு
விஷால், அஞ்சலி, சந்தானம், வரலட்சுமி சரத்குமார், சோனு சூத், மணிவண்ணன், சடகோபன் ரமேஷ், மனோபாலா, மயில்சாமி, லொள்ளு சபா மனோகர், முத்துக்காளைஒளிப்பதிவு
ரிச்சர்ட் எம். நாதன்படத்தொகுப்பு
பிரவின் கே.எல், என்.பி ஶ்ரீகாந்த்இசை
விஜய் ஆண்டனிகதை
சுந்தர் சி., வெங்கட்ராகவன்திரைக்கதை, இயக்கம்
சுந்தர் சி.தயாரிப்பு நிறுவனம்
ஜெமினி பிலிம் சர்கியூட், விஷால் பிலிம் ஃபேக்டரிவெளீயீடு:
12 ஜனவரி 20252013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதியன்று தணிக்கைச் சான்றிதழ் பெற்ற இத்திரைப்படம், 2025 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாகத் வெளியாகியிருக்கிறது. இப்படம் 2013 பொங்கல் ரிலீஸ் ஆக வந்திருக்க வேண்டியது. ஆக, 12 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கிறது. தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதற்காக உயிரை கூட கொடுக்க தயாராக இருக்கும் எம்ஜிஆர் (எ) ராஜா (எ) மதகஜராஜா (விஷால்). கேபிள் டிவி நடத்தும் அவர் தன்னுடைய பால்யகால நண்பர்களை (சந்தானம், சடகோபன் ரமேஷ், நிதின் சத்யா) ஒரு திருமணத்தில் சந்திக்கிறார். அந்த திருமணத்தில் இருக்கும் சிக்கல்களை தீர்க்கும் அவர், தனது நண்பர்களில் ஒருவருக்கு ஒரு டிவி சேனல் அதிபரால் (சோனு சூட்) பெரிய பிரச்சினை ஏற்பட்டதை தெரிந்து கொண்டு அவரிடம் நியாயம் கேட்க செல்கிறார். இதில் ஹீரோவுக்கும் அரசியல் பலம் படைத்த அந்த தொழிலதிபருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலில் யார் வென்றார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை. இந்த படம் 12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகிருக்க வேண்டிய ஒன்று. அந்த கால படங்களில் இடம்பெற்றிருந்த சிறுபிள்ளைத்தனமான காமெடி, இரண்டு ஹீரோயின்கள், அவர்களுக்கு தனித்தனியே இரண்டு ’கவர்ச்சி’ பாடல்கள், அவர்களை வைத்து இரட்டை அர்த்த வசனங்கள் அனைத்தும் இதிலும் உள்ளன. ஆனால் எதை கொடுத்தால் ஆடியன்ஸ் மத்தியில் எடுபடும் என்ற ‘பல்ஸை’ அறிந்து அதை ஓவர்டோஸ் ஆகிவிடாமல் சரியான விகிதத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுந்தர் .சி. ஆபாசம், அருவெருப்பு போன்ற எல்லைகளைத் தொடாமல் நாயகிகளைக் கவர்ச்சிப்பதுமைகளாகக் காட்டுவதில் தான் ஒரு கில்லாடி என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார் சுந்தர்.சி. விஷால் சண்டைக்காட்சிகளில் ஸ்டண்ட்மேன்களை அந்தரத்தில் பறக்கவிடுகிறார். கார்ட்டூன்களுக்கே சவால்விடும்படியாகச் சில ‘ட்ரிக்’குகளை திரையில் செய்து காட்டுகிறார். இருப்பினும் படத்தின் கதையோடு அவை பொருந்தி நிற்பதால், ‘இப்படியொரு உற்சாக விஷாலை பார்த்து எத்தனை நாளாச்சு’ என்று மனதுக்குள் தோன்றுகிறது. அஞ்சலிதான் இதில் ‘மெயின்’ நாயகி. ஆனால், அவரை மட்டும் கவர்ச்சியாகக் காட்டினால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று வரலட்சுமியையும் களமிறக்கியிருக்கிறார் சுந்தர்.சி. இருவருமே தங்கள் பணியைச் செவ்வனே செய்திருக்கின்றனர். சந்தானத்தின் ‘வின்டேஜ்’ நையாண்டிகள், ஒன்லைன் கவுன்டர்கள் பெரிய பலம். பழைய சந்தானத்தை ஆடியன்ஸ் எவ்வளவு மிஸ் செய்கிறார்கள் என்பதை ஒவ்வொரு அவர் பேசும் ஒவ்வொரு வசனத்துக்கும் எழும் ஆர்ப்பரிப்புகளே சாட்சி. குறிப்பாக முதல் பாதி முழுவதும் சந்தானத்துக்கும் அவரது மாமியாராக வரும் கே.எஸ்.ஜெயலட்சுமிக்கும் இடையிலான காட்சிகள் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கின்றன. அஞ்சலியின் வீட்டுக்கு விஷால், சந்தானம் அண்ட் கோ குடிவரும் காட்சிகள் காமெடிக்காக வைக்கப்பட்டிருந்தாலும், அவற்றில் இடம்பெற்றிருந்த இரட்டை அர்த்த வசனங்களும், கவர்ச்சி என்ற பெயரில் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளும் நெளியச் செய்கின்றன. இவற்றை தவிர்த்திருக்கலாம். அஜய் ரத்னம், ஜான் கொக்கன், சோனு சூட், மொட்டை ராஜேந்திரன் போன்றவர்கள் வில்லன்களாக வந்து போகின்றனர். மணிவண்ணன், மனோபாலா, சிட்டிபாபு தொடங்கி ஆர்.சுந்தர்ராஜன், சரத் சக்சேனா, சுதா, விச்சு விஸ்வநாத், லொள்ளு சபா சுவாமிநாதன், மனோகர், ஈஸ்டர், முத்துகாளை, சத்யா, கே.எஸ்.ஜெயலட்சுமி, மொட்டை ராஜேந்திரன் என்று பெரும் நட்சத்திர கும்பலே இப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களோடு ஆர்யாவும் சதாவும் வேறு ஒரு காட்சியில் தோன்றியிருக்கின்றனர். நிதின் சத்யா, சடகோபன் ரமேஷ், விஷால் கூட்டணியோடு இணைந்து சந்தானம் அடிக்கிற ‘ஒன்லைனர்கள்’ நான்ஸ்டாப் சிரிப்புக்கு உத்தரவாதம் தருகின்றன. விஜய் ஆண்டனியின் ‘சிக்கு புக்கு ரயிலு வண்டி’, ‘டியர் லவ்வரு’, ‘சற்று முன்வரை’, ‘தும்பக்கி தும்பை’ பாடல்கள் நம்மைச் சட்டென்று ஈர்க்கின்றன. சுமார் பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து வெளியானாலும், சுந்தர்.சியின் ‘மத கஜ ராஜா’ படம் இப்போது ஒரு சிறந்த பொழுதுபோக்கு படமாக அமைந்திருப்பது சிறப்பு. ***** பாடல்கள்
1. சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி
படம் : மத கஜ ராஜா (2025) பாடியவர்கள் : சின்ன பொண்ணு மற்றும் பிரபு பண்டலா இசை : விஜய் ஆண்டனி பாடலாசிரியர் : அண்ணாமலை வீடியோ கொய்யால கொய்யால மாமாஹே கொய்யால கொய்யால மாமாஹே கொய்யால கொய்யால மாமாஹே பெண் : சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி சின்ன சேலம் போற வண்டி ஆண் : அதுல ஏறி போகலாமா சேலம் பெண் : நான் அடிக்கட்டுமா தஞ்சாவூரு மேளம் ஆண் : ம்ம்ம் திண்டுக்கல்லு பூட்டா நீ சிவகாசி வேட்டா நீ யார கேட்டு போட்டடி நீ தாவணி பெண் : யே தன்னா நன்னா நன்னா நன்னா தன்னானா பெண் : சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி சின்ன சேலம் போற வண்டி ஆண் : அதுல ஏறி போகலாமா சேலம் பெண் : நான் அடிக்கட்டுமா தஞ்சாவூரு மேளம் ஆண் : ஏ ஐயோ நானும் என்ன சொல்ல என் மனசு எங்க புள்ள காடு மலை தேடி அலையிறேன் டீ பெண் : யே தன்னா நன்னா தன்னா நன்னா தானா ஆண் : நான் வானம் தாண்டி போக நானும் ஏணி செய்ய போறேன் உன்ன பூமி தாண்டி தூக்கி போக போறேன் பெண் : யே தன்னா நன்னா தன்னா நன்னா தானா ஆண் : ஏ ஒரு பேச்சும் பேசாம ஒரு வார்த்த சொல்லாம உசுர உருவி புட்டு ஓடி விட்டாயே என் உசுர உருவி புட்டு ஓடி விட்டாயே பெண் : சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி சின்ன சேலம் போற வண்டி ஆண் : அதுல ஏறி போகலாமா சேலம் பெண் : நான் அடிக்கட்டுமா தஞ்சாவூரு மேளம் ஆண் : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே கொய்யால கொய்யால மாமாஹே கொய்யால கொய்யால மாமாஹே கொய்யால கொய்யால மாமாஹே கொய்யால கொய்யால மாமாஹே ஆண்: ஏ ஒத்த கேனி ஊருக்குள்ள ஒத்த குடம் தண்ணி மொல்ல ஒத்தையில பொண்ணு நீயும் போக பெண் : யே தன்னா நன்னா தன்னா நன்னா தானா ஆண் : அட பத்தமட பாய் இருக்க பக்கத்துல நீ இருக்க செத்து செத்து நான் பொழைக்கிறேன் டீ பெண் : யே தன்னா நன்னா தன்னா நன்னா தானா ஆண் : ஒரு பேச்சும் பேசாம ஒரு வார்த்த சொல்லாம உசுர உருவி புட்டு ஓடி விட்டாயே என் உசுர உருவி புட்டு ஓடி விட்டாயே பெண் : சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி சின்ன சேலம் போற வண்டி ஆண் : அதுல ஏறி போகலாமா சேலம் பெண் : நான் அடிக்கட்டுமா தஞ்சாவூரு மேளம் ஆண் : ம்ம்ம் திண்டுக்கல்லு பூட்டா நீ சிவகாசி வேட்டா நீ யார கேட்டு போட்டடி நீ தாவணி பெண் : யே தன்னா நன்னா நன்னா நன்னா தன்னானா பெண் : சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி சின்ன சேலம் போற வண்டி ஆண் : அதுல ஏறி போகலாமா சேலம் பெண் : நான் அடிக்கட்டுமா தஞ்சாவூரு மேளம் ***** |