நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்

nilavuku en mel ennadi kobam
நடிப்பு
பவிஷ் நாராயண், மாத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், ப்ரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன், சரத்குமார், ஆடுகளம் நரேன், சரண்யா பொன்வண்ணன், பிரியங்கா மோகன், ஜி.வி. பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு
லியான் பிரிட்டோ

படத்தொகுப்பு
பிரசன்னா ஜி.கே

இசை
ஜி.வி. பிரகாஷ் குமார்

திரைக்கதை, இயக்கம்
தனுஷ்

தயாரிப்பாளர்
தனுஷ், கஸ்தூரி ராஜா, விஜயலட்சுமி கஸ்தூரி

தயாரிப்பு நிறுவனம்
வுண்டர்பார் பிலிம்ஸ், ஆர்.கே. புரொடக்சன்ஸ்

வெளீயீடு:
21 பிப்ரவரி 2025

     தனுஷ் தனது வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, தாமே இயக்கியுள்ள படம் தான் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'.

     பவர் பாண்டி, ராயன் ஆகிய படங்களுக்குப் பிறகு தனுஷ் மூன்றாவது முறையாக இந்தப் படத்தில் இயக்குநராகக் களமிறங்கியுள்ளார்.

     இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். மலையாள நடிகர் மாத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், ப்ரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

     சமையல் கலை மாணவரான பிரபு (பவிஷ்) ஒரு பார்ட்டியில் நிலாவை(அனிகா) சந்திக்கிறார். இருவரும் காதலில் விழுகிறார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் குடும்ப சூழ்நிலையின் காரணமாக அவர்கள் காதல் முறிகிறது.

     பின்னர் பிரபுவுக்கு அவரின் பள்ளிப் பருவ தோழியான ப்ரீத்தியுடன் (பிரியா வாரியர்) திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இருப்பினும் பிரபுவால் நிலாவுடனான தனது காதலை மறக்க முடியவில்லை.

     சில மாதங்கள் கழித்து நிலாவின் திருமண அழைப்பிதழ் பிரபுவுக்கு கிடைக்கிறது. அந்தத் திருமணத்துக்குச் செல்லுமாறு ப்ரீத்தி பிரபுவை கோவா அனுப்பி வைக்கிறார். இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை.

     நாயகனாக அறிமுகமாகியிருக்கும் பவிஷ், அரட்டை, மகிழ்ச்சி, துக்கம், சோகம் என எல்லாக் காட்சிகளிலும் தனது மாமா தனுஷை பிரதிபலிக்க முயல்கிறார். ‘நான் குக் இல்ல, செஃப்’ என்று சொல்லும் காட்சிகள் உள்ளிட்ட சில காட்சிகளில் அவர் ரசிக்க வைத்தாலும் எமோஷனல் காட்சிகளில் முதிர்ச்சி வேண்டும்.

     நாயகி அனிகா சுரேந்திரனுக்கு முக்கியமான கதாபாத்திரம். அதை ஓரளவுக்குப் பூர்த்தி செய்திருக்கிறார். ப்ரியா பிரகாஷ் வாரியரை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம்.

     கதாநாயகனின் உயிர் நண்பனாக மேத்யூ தாமஸ் நடித்த ராஜேஷ் கதாபாத்திரம் நன்றாக உள்ளது. நகைச்சுவை காட்சிகளில் வேற லெவலில் அசத்தியுள்ளார். சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேனின் அனுபவ நடிப்பு படத்திற்கு பலம்.

     ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசையும் பாடல்களும் திரையரங்கை அதிர வைக்கிறது. ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை எமோஷனல் காட்சிகளை காப்பாற்றியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதேபோல் படத்தில் அவருடைய கேமியோவும் சிறப்பாக உள்ளது. பிரியங்கா மோகனின் நடனமும் அருமை.

     லியான் பிரிட்டோவின் ஒளிப்பதிவிலும் பிரசன்னா ஜி.கே. வின் படத்தொகுப்பும் ஜாக்கியின் கலை இயக்கமும் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன.

     வழக்கமான காதல் கதை என கூறி இப்படத்தை தனுஷ் அடையாளப்படுத்தி இருந்தாலும் கூட, சற்று வித்தியாசமான காதல் கதையாகவே தெரிந்தது. ஆனால், நகைச்சுவை காட்சி ஒர்கவுட் ஆனதுபோல், எமோஷனல் காட்சிகளில் நடிகர்களின் நடிப்பு பெரிதாக மனதை தொடவில்லை. அதோடு படத்தில் நடுத்தர குடும்பத்தில் கூட இளம் பெண்கள் மது அருந்துவது போன்ற காட்சிகளும், படத்தில் பெரும்பாலும் ஆண்களும் பெண்களும் கையில் கிளாஸ் உடன் இருப்பது போன்ற காட்சிகளும் படத்திற்கு மைனஸாக அமைகிறது.

*****

பாடல்கள்
1. கோல்டன் ஸ்பேரோ
படம் : நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் (2025)
பாடியவர்கள் : சுபாஷிணி, ஜி.வி. பிரகாஷ் குமார், தனுஷ் அறிவு
இசை : ஜி.வி. பிரகாஷ் குமார்
பாடலாசிரியர் : அறிவு

வீடியோ


ஆண்: வாக்கிங் ஸ்லோ
மனசுல சோகம்

ஆண்: ஹே மை கோல்டன் ஸ்பேரோ

பெண்: ஹே ஹே வாம்மா வாம்மா
கம் அண்ட் சிங்கு
குயின தேடி வந்தான் கிங்கு
டைலா டைலா பீப்பி டும்மு
மாலை மாத்தி போடு ரிங்கு
கோல்டன் ஸ்பேரோ
என் நெஞ்சுல ஏரோ
நீ இல்லாத லைஃபு
ஹே, ரொம்ப சாரோ
மாஸ்க் ஆஃப் சாரோ
நம்ம பையன் தான் ஹீரோ
சிங்கிக் டூயட்டு
வேற யாரோ

பெண்: கப்பில் கப்பில் கோல்
இவ சிங்கிலா சுத்தன கேர்ளு
ஹே இவன் சங்கதி என்னனு கேளு
இனி இவன் தான் ஆளு

பெண்: ஹே நெத்திலி நெத்திலி மீனு
ஒரு கெத்துல சுத்துன நீனு
ஹேய் நிக்குது நிக்குது லைன்னு
நீ மினுக்குற மூணு

பெண்: கோல்டன் ஸ்பேரோ
என் நெஞ்சுல ஏரோ
நீ இல்லாத லைப்பே
ரொம்ப சாரோ
மாஸ்க் ஆஃப் சாரோ
நம்ம பையன் தான் ஹீரோ
சிங்கிங் டூயட் வேற யாரோ

பெண்: ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே

ஆண்: அடி அம்மணி அம்மணி
கியூட் கண்மணி
கண்மணி கண்மணி
கண்மணி கண்மணி
சம்பவம் பண்ணுற
ஹார்ட்டு குள்ள நீ
குள்ள நீ குள்ள நீ
குள்ள நீ குள்ள நீ

ஆண்: அடி அம்மணி அம்மணி
கியூட் கண்மணி
சம்பவம் பண்ணுற
ஹார்ட்டு குள்ள நீ
கொட்டி கெடக்குது
சிக்கித் தவிக்குது
உள்ளுக்குள்ள ஒரு தாட்டு
நீ சிரிச்சுக்கோ என்ன பாத்து

ஆண்: அடி எக்ஸாம்ல பெயில் ஆனாலும்
வெக்ஸ் ஆவ மாட்டேன்
உன் எக்ஸா இப்போ ஆனதாலே
எக்ஸ்ட்ராவா போட்டேன்
அடி எக்ஸாம்ல பெயில் ஆனாலும்
வெக்ஸ் ஆவ மாட்டேன்
உன் எக்ஸா இப்போ ஆனதாலே
எக்ஸ்ட்ராவா போட்டேன்

ஆண்: வாழ்க வாழ்க மகராசி
முடிஞ்சு போச்சு இவன் ராசி
நெனச்சு நெனச்சு பெயின் ஆச்சு
சொல்லுடி சுந்தரி டேக் இட் ஈசி

பெண்: ஸ்வீட்டா ஹார்டா
தொணைக்கு நான் இருக்கவா
தெனம் தெனம் துடிக்கவா
குயட்டா டைட்டா
இறுக்கி நான் புடிக்கவா
இலக்கணம் படிக்கவா

ஆண்: ஸ்டாரில் நைட்டில் நான்
உன் ஸ்டோரி டைட்டில் நான்
மானம் பாக்காத மேன் ஆகுறேன்
ஹேய் நானே பொயட்டு
எங்கே என் டூயட்டு
ரொம்ப நாளாக நான் தேடுறேன்.

ஆண்: ஏடி என்ன எங்கடி அடிச்ச
ஏடி எட்டி கிடக்குறேன்
ஏடி என்ன எங்கடி தொலச்ச
ஏடி நானும் முழிக்குகிறேன்

பெண்: சொல்லிடு சொல்லிடு ஓகே
நான் வெக்குறேன் வெத்தல பாக்கே
கண்ணுல கண்ணுல லாக்கே
இது கல்யாண சோக்கே

ஆண்: மின்னலு மின்னலு பிளாஷே
உன்ன கண்டதும் நெஞ்சமே கிராஷே
உள்ளதும் உள்ளதும் போச்சே
கதை திண்டாட்டம் ஆச்சே

ஆண்: கோல்டன் ஸ்பேரோ
என் நெஞ்சுல ஏரோ
நீ இல்லாத லைப்பே
ரொம்ப சாரோ
மாஸ்க் ஆஃப் சாரோ
நம்ம பையன் தான் ஹீரோ
சிங்கிங் டூயட் வேற யாரோ

பெண்: வாம்மா வாம்மா
கம் அண்ட் சிங்கு
குயின தேடி வந்தான் கிங்கு
டைலா டைலா பீப்பி டும்மு
மாலை மாத்தி போடு ரிங்கு

ஆண் & பெண்: கோல்டன் ஸ்பேரோ
என் நெஞ்சுல ஏரோ
நீ இல்லாத லைப்பே
ரொம்ப சாரோ
மாஸ்க் ஆஃப் சாரோ
நம்ம பையன் தான் ஹீரோ
சிங்கிங் டூயட் வேற யாரோ

*****